ஸ்விட்ச் போர்டில் எமன்.. சென்னையில் தவறுதலாக கொசு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு
சென்னை: சென்னையில் தவறுதலாக கொசு மருந்தைக் குடித்த 2 வயது குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது.
சென்னை மணலி மாத்தூரில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் மருந்தை குடித்த இரண்டு வயது குழந்தை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மணலி மாத்தூரை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் லட்சுமி இன்று காலை ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்டிருந்த கொசுவிரட்டி மருந்தை உறிஞ்சி உள்ளார். குழந்தை கொசு விரட்டி மருந்தை உறிஞ்சியதை பார்த்ததும் பதறிப்போய் உடனே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி குழந்தையின் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் கொசு விரட்டி மருந்துகளை வைக்க வேண்டாம். அது சில நேரங்களில் கவனிக்காத போது, இதுபோல் பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கொசு பத்தி, கொசு விரட்டி எதை தொட்டாலும். உடனே கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு, உணவுகளை தொடுங்கள். அப்படியே சாப்பிட வேண்டாம்.குழந்தைகளையும் கொசு விரட்டிகளை தொட்டு உணவு அருந்த அனுமதிக்காதீர்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications