அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. 25 பக்கத்தில் எப்ஐஆர் பதிவு
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் மீது 25 பக்கத்தில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்ய நாராயணன். இவரை சத்யா என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர் வருமானத்திற்கு அதிகமாக 2.64 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரததில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சத்யாவிற்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருவள்ளூர் உள்பட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே எஸ்வி வேலுமணி, எம்ஆர் விஜயபாஸ்கர் உள்பட ஏழு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தி இருந்தது. இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது 25 பக்கத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 2.64 கோடி சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் தமிழக அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நேற்று நடத்திய நிலையில், இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications