மோசமான நிலைமை.. டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ.11.8 கோடியை இழந்த ஐடி ஊழியர்.. அரசு அவ்வளவு எச்சரித்ததே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் முறைகேடுகள், மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் 18 நாட்களில் 11.8 கோடி ரூபாயை இழந்து உள்ளார்.

அந்த ஐடி பொறியாளருக்கு.. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரியைப் போல் மோசடிக்காரர்கள் போன் செய்து மிரட்டி உள்ளனர். உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. உங்கள் ஆதாரில் இணைக்கப்பட்ட சிம் கார்டை வைத்து நிறைய மோசடிகள் நடந்து உள்ளன.

bigg boss tamil 8 bigg boss 8

முக்கியமாக நிறைய சைபர் மோசடிகள் நடந்து உள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம். மும்பையில் உள்ள காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளோம். இந்த வழக்கில் ஜாமீன் பெற நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்த கைதுக்கு பயந்து 11.8 கோடியை மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி உள்ளார். ஒரே நாளில் இல்லாமல் 18 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மோசடிக்கு பணம் இழந்துள்ளார்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சமீபத்தில் மக்கள் இடையே தீவிரமாக பரவி வரும் டிஜிட்டல் அரஸ்ட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்து உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்று எச்சரித்து உள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதும், ஆன்லைன் மோசடிகளில் இருந்து விலகி இருப்பதும் அவசியம். சாத்தியமான மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து விலகி இருப்பது.. பாதுகாப்பாக இருப்பது அவசியம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்து எச்சரித்து உள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

காலர் டோன் எச்சரிக்கை:

அதன்படி மக்களிடம் இதற்காக டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில், உங்களிடம் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் என்ற பெயரில் யாரவது பேசினாலோ.. வீடியோ காலில் பேசினாலோ அதை நம்ப வேண்டாம். அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அது போன்ற போன் கால்கள் வந்தால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் என்று காலர் டோன் மூலம் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

பிக்பாஸ் சவுந்தர்யாவிற்கு நேர்ந்த சம்பவம்:

பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் சவுந்தர்யா சமீபத்தில் 17 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகவும்.. ஒரு கும்பல் தனது பணத்தை மோசடி செய்து பறித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

போலீசாரிடம் பதியப்பட்ட எப் ஐ ஆர் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளனர். சவுந்தர்யா சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது இந்த முறைகேடு நடந்து உள்ளது. அப்போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.

மும்பையில் இருந்து ஈரானுக்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம்.

சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளோம். விசாரணை செய்து வருகிறோம். நான் ராகேஷ் சர்மா. உங்களுக்கு ஸ்கைப் கால் செய்கிறேன் என்று கூறி போன் செய்துள்ளார். அதன்பின் அந்த போன் காலிலேயே உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளேன். உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதால் நீங்கள் எதுவும் செய்ய கூடாது.

நீங்கள் யாரிடமும் பேச கூடாது. உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. நீங்க;ள் எத்தனை நாட்களாக போதை பொருள் கடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதை அடுத்து சிபிஐ தொடர்பான ஆவணங்கள், ஆர்பிஐ தொடர்பான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதில் சவுந்தர்யா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து பைங்கு சவுந்தர்யா அந்த நபருக்கு பணம் அனுப்பி உள்ளார்.மொத்தமாக 12 பணபரிவர்த்தனைகள் மூலம் பணம் அனுப்பி உள்ளார்.

வழக்கு நடத்த, ஜாமீன் வழங்க, விசாரணையை சென்னைக்கு மாற்ற என்று பல காரணங்களுக்காக பணம் அனுப்பி உள்ளார். மொத்தமாக இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 17 லட்சம் அனுப்பி உள்ளார். இப்படித்தான் அவர் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டில், FedEx, DHL, BlueDart, DTDC போன்ற கூரியர் நிறுவனங்களின் பெயரில் நடந்த இந்த மோசடிகளில் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில், மோசடி செய்பவர்கள் குறிவைக்கப்பட்ட நபர்களை போனில் அழைத்து, உங்கள் பெயரில் ஒரு கூரியர் வந்துள்ளது. அந்த கூரியர் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக கூறி மிரட்டுவதை வழக்கமாய் வைத்துள்ளனர்..

உதாரணமாக சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று மிரட்டுவார்கள். அதன்பின் வழக்கு நடத்த.. ஜாமீன் வழங்க, விசாரணையை அவர்களின் ஊருக்கு மாற்ற என்று பல காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்து பல லட்சம் பணத்தை ஏமாற்றுவார்கள். இது போன்ற கால்கள் வந்தால் நம்ப கூடாது.. அதை நம்ப ஏமாற கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+