சின்னதாய் மாற்றி யோசித்தால் எல்லாமே சூப்பராக மாறும்.. பல்லாவரத்தில் தீர்ந்த பல வருட பஞ்சாயத்து
சென்னை: சென்னையில் இருப்பவர்களுக்கு பல்லாவரத்தை பற்றி நன்றாகவே தெரியும். எவ்வளவு மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பது. இத்தனைக்கும் விமான நிலையம் வரை மேம்பாலம் இருக்கிறது. சிக்னல்களும் பெரிதாக இல்லை.. ஆனாலும் தீர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் சின்னதாய் மாற்றி யோசித்த காரணத்தால் அங்கிந்த பல வருட பஞ்சாயத்து தீர்ந்துள்ளது.
நிறைய பிரச்சனைகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் தவிப்பதும், அப்படியே அந்த பிரச்சனையில் ஒரே வழியை பற்றி யோசிப்பதுமே தீர்வு இல்லாமல் போக காரணமாக உள்ளது. ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வு என நாம் நினைக்கும் வழிகளை தவிர மாற்றுவழிகளை தேர்வு செய்தால் அல்லது சின்னதாய் மாற்றி யோசித்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். அதற்கு சிறந்த உதாரணம் தான் பல்லாவரம் மேம்பாலம்.

சென்னையில் வாழ்பவர்களுக்கு பல்லாவரம் தெரியாமல் இருக்காது. குறிப்பாக தென்சென்னை பகுதியில், தாம்பரம் பகுதியில் உள்ளவர்களுக்கு பல்லாவரம் எவ்வளவு மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள இடம் என்பது தெரியும்.. சென்னை பல்லாவரம் என்பது விமான நிலையத்திற்கு அடுத்துள்ள சந்திப்பாகும். பல்லாவரத்தில் இரண்டு முக்கியமான சந்திப்புகள் உள்ளன. ஒன்று குன்றத்தூர் செல்லும் சாலை.. இன்னொன்று துரைப்பாக்கம் , வேளச்சேரி செல்லும் சாலை, துரைப்பாக்கம் வேளச்சேரி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் இருப்பதால் அங்கு பிரச்சனை இல்லை.
அதேநேரம் பல்லாவரம் குன்றத்தூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலம் அமைத்தார்கள். அதுவும் எப்படி சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு பாலம் அமைத்தார்கள். அந்த பாலம் கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் தாம்பரத்தில் விமான நிலையம் நோக்கி செல்லும் மார்க்கமாக மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த பாலம் இருவாகனங்கள் செல்லக்கூடிய பாலம் என்றாலும், ஒருவழியில் முடியும் மேம்பாலமாகவே இருக்கிறது. அதனால் தான் தாம்பரத்தில் இருந்து விமான நிலையம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக குரோம்பேட்டையில் இருந்து கிண்டி செல்லும் சாலையில பெரிய நெரிசல் இல்லாமல் வாகனங்கள் எளிதாக சென்று வந்தன.
ஆனால் விமான நிலையத்தில் இருந்து குரோம்பேட்டை தாம்பரம் நோக்கி செல்லும் பாலத்தை ஒட்டிய சாலை மிகவும் குறுகியதாக இருந்ததுடன் பேருந்து நிலையமும் இருந்த காரணத்தால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளிலும், பல்லாவரம் சந்தை செயல்படும் வெள்ளிக்கிழமையிலும் தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் இருந்து வந்தது. மேம்பாலமும் கட்டியாச்சு.. சிக்னலும் இல்லை.. என்னதான் செய்வது என்று யோசித்தால் சாலையை அகலப்படுத்தவும் முடியாது. சாலையை ஒட்டியுள்ள பேருந்துநிலையத்தையும் மாற்ற முடியாது. இத்தனைக்கும் அனகாபுத்தூர் குன்றத்தூர் செல்லும் வாகனங்கள் குரோம்பேட்டை துரைப்பாக்கம் பாலத்தில் ஏறித்தான் சுற்றி செல்கின்றன. அப்படி இருந்தும் இனி என்னதான் செய்வது என்று யோசித்த தாம்பரம் போலீசார் சின்னதாய் மாற்றி யோசித்தார்கள். அதுதான் பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் பஞ்சாயத்திற்கு தீர்வாக மாறி உள்ளது.
மேம்பாலத்தை இருவழியாக மாற்ற முடிவு செய்தார்கள். அதேநேரம் இருபக்கமும் சமமாக வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தில் ஒளிரும் கட்டைகளை அமைத்தனர். சரியாக இரு கார்கள் இருபக்கமும் எளிதாக கிராஸில் போக முடியும் என்கிற அளவிற்கு தடுப்புகளை மாற்றினார்கள். விமான நிலையத்திற்கு சற்று தள்ளி பாலம் முடியும் இடத்தில் தடுப்புகளை உடைத்து ஒரு ஆரம்பத்தை உருவாக்கினார்கள். இதில் கார்கள் பைக்குள் உள்பட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் வழியை மாற்றினார்கள்.
இதனால் தற்போது வாகனங்கள் இருவழியாக பல்லாவரம் மேம்பாலத்தில் செல்கின்றன. இதேபோல் பல்லாவரத்தில் இருந்து பாலம் இறங்கும் இடத்தில் பாதைகளை உடைத்து நேராக துரைப்பாக்கம் பாலத்தில் ஏறி செல்ல வழியை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக இப்போது போக்குவரத்து நெரிசல் பல்லாவரத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. சின்னதாய் மாற்றியோசித்தால் பெரிய பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும் என்பதற்கு பல்லாவரம் பாலம் சிறந்த உதாரணம் ஆகும்.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications