சென்னை அண்ணா நகரில் 15 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்.. அதிர்ச்சியில் சாந்தி காலனிவாசிகள்
சென்னை: சென்னை அண்ணா நகரில் 15 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.
சென்னையில் அண்ணாநகரில் சாந்தி காலனியில் 4ஆவது அவென்யூ சாலை உள்ளது. இங்கு இன்று காலை அனைவரும் பள்ளிகளுக்கும், பணிகளுக்கும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் 15 அடிக்கு திடீர் பள்ளம் உருவானது. இதனால் வாகனஓட்டிகள் சாலைகளில் அப்படியே நின்று விட்டனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் நேரில் வந்து அந்த பள்ளத்தை மூடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இந்த பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது போல் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications