சென்னையில்.. பிரபல அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் புது வித மோசடி.. ஆக்சன் எடுத்த சிஎம்டிஏ!
சென்னை: சென்னையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கட்டுமானத்தில் புது வித மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டுமானம் மீது தற்போது சென்னை மாநகராட்சி ஆணையம் ஆக்சன் எடுத்துள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த படம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுவதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் வாய்ஸ் கொடுத்த விஜய்சேதுபதி என்று பெரிய டீம் இந்த படத்திற்காக வேலை செய்துள்ளது.

திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது, கே பி பார்க் கட்டிட மோசடி என்று பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது மக்கள் இடையே குடியிருப்பு கட்டுமானம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்பட்டு உள்ளது. அதன்பின்தான் சமீபத்தில் கூட இடிந்து விழும் அபாயத்தில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் இந்த கட்டிடம் தற்போது உள்ளுக்குள்ளேயே இடிந்து விழ தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கட்டுமானத்தில் புது வித மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டுமானம் lic நகர், 5வது பிரதான சாலை, பள்ளிக்கரணை பகுதியில் அமைந்து உள்ளது.

இங்கே குடியிருப்பு ஒன்று குமரேசன் என்பவரின் AA builders நிறுவனம் சார்பாக கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த கட்டுமானம் மீதுதான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ஆணையர் ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலில் இந்த மனைப்பகுதியை இரண்டாக பிரித்து இரண்டு குடியிருப்பு கட்ட அனுமதி கேட்டுள்ளனர். ஒரு பாதி நிலத்தில் 6 யூனிட் என்று முழு இரண்டு மனைப்பகுதிக்கும் மொத்தம் 12 யூனிட் கட்ட முடிவு செய்யப்பட்டு அனுமதி வாங்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த கட்டுமானத்தை மேற்கொள்ளும் போது ஒரே ஒரு குடியிருப்பை மொத்தமாக கட்டி உள்ளனர். தனி தனியாக இரண்டு குடியிருப்பு கட்டாமல் இரண்டு குடியிருப்பையும் சேர்த்து ஒன்றாக கட்டி உள்ளனர். இரண்டு குடியிருப்பு கட்டினால் 22 பில்லர்கள் இதில் எழுப்ப வேண்டும். ஆனால் இரண்டு குடியிருப்பையும் கிளப் செய்து கட்டினால் 12 பில்லர் வைக்க வேண்டும்.,

சுமார் 35-40 லட்சம் ரூபாய் வரை மிச்சம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மோசடி செய்யப்பட்டு உள்ளது. பொய்யாக பிளான் காட்டி பர்மிஷன் வாங்கி, இரண்டு பிளான்களை சேர்த்து கட்டி உள்ளனர். இதன் மூலம் பில்லர்களை குறைத்து கட்டி தரமற்ற கட்டிடத்தை எழுப்பி உள்ளனர்.
இதன் மூலம் பில்லர் இல்லாத இடங்களில் மேற்பகுதி கான்கிரீட் இப்போதே இறங்க தொடங்கி விட்டது. சென்னை ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை காணாத அளவிற்கு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி இந்த மோசடியை செய்துள்ளனர். அதிலும் சதுப்பு நிலப்பகுதியில் இந்த கட்டிடத்தை குறைவான பில்லர்களுடன் கட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த கட்டுமானம் மீது தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆக்சன் எடுத்துள்ளார். இதில் மேற்கொண்டு கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கட்டுமானத்தை இடிக்கவும் சென்னை மாநகராட்சி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.













Click it and Unblock the Notifications