ஏ.சி.சண்முகத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு! சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
சென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவருக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வென்றார். 3.52 லட்சம் வாக்குகளுடன் ஏ.சி.சண்முகம் இரண்டாவது இடத்தை பெற்றார். இந்த நிலையில் ஏ.சி.சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஏ.சி.சண்முகம் நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இவர் தனது அரசியல் பயணத்தை அதிமுகவிலிருந்து தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 52.93% வாக்குகளை பெற்று வென்றார். இவர் எம்பி, எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
ஆரணியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிபராக உள்ளார். 1984 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடந்த 2014, 2019, 2024 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியையே தழுவினார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சுந்தர் சியின் அரண்மனை 3, 4 ஆகியவைகளை ஏ.சி.சண்முகம்தான் தயாரித்தார்.
இந்த நிலையில் ஏ.சி.சண்முகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சுந்தர் சியும் குஷ்புவும் வந்த நிலையில் மத்திய அமைச்சராக போகிறார் சண்முகம் என சுந்தர் சி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications