பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம்.. திமுகவுக்கு நெருக்கடி தரும் ஏசிஎஸ் வாதம்
Recommended Video
சென்னை: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம் என ஏசி சண்முகம் தரப்பு வாதம் செய்தது.
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அறிவிப்பு
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நேற்றைய தினம் வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்தது. எனினும் ஆம்பூர் , குடியாத்தம் சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்தது.

அவசர வழக்கு
இதை எதிர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஹைகோர்ட்டை நாடினார். அப்போது தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தகுதி நீக்கம்
vஅப்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஏசி சண்முகம் தரப்புபணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.

திமுகவுக்கு நெருக்கடி
அதற்காக பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்தக் கூடாது என்பது எங்கள் வாதம் என ஏசி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற இவர்களின் வாதத்தால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications