Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதிக்கப்பட்ட 2000 பேர் மீது வழக்கு! திமுக செய்த தந்திரம்? செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? வழக்கறிஞர் Decode

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செய்த ஒரு தந்திரத்தால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது என்று வழக்கறிஞர் குமரகுரு ஒரு புதிய விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 471 நாட்களாகச் சிறையிலிருந்து வந்தார். தனக்கு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த பல மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன.

senthil balaji dmk

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். நேற்று அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கியதை அடுத்து மாலை 7 மணிக்கு மேல் செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வெளியே வந்ததை திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். முதல்வர் ஸ்டாலின் அவரை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது எப்படி? அது பற்றி பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான குமரகுரு மிக விரிவான விளக்கத்தை முன்வைத்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை. அதில் பிரச்சினை என்னவென்றால், அமைச்சரான பிறகு இடி அலுவலகத்திற்குச் சென்று வாரம் இரண்டு முறை கையெழுத்திட்டு வருவார். அதுதான் சங்கடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நல்ல அரசாங்கத்திற்கு அது அழகானதல்ல.

ஆனால், இந்த திமுக அரசாங்கம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை. ஒருவேளை அதற்கும் வெடி வெடித்துக் கொண்டாடினாலும் கொண்டாடலாம். இந்த வழக்கை விசாரிக்கும் குற்றப் பிரிவு காவல்நிலையத்திற்கும் சென்று மாதத்தில் முதல் சனிக்கிழமை கையெழுத்துப் போடவேண்டும். அப்படி என்றால் அரசாங்க கொடியுடன் சைரன் வைத்த காரில் போய் செந்தில் பாலாஜி கையெழுத்துப் போடுவாரா? அதை மக்கள் ஏற்பார்களா? என்பதை நான் சொல்ல முடியாது. சட்டரீதியாக இது தவறு இல்லை. தர்ம படி தவறு.

செந்தில் பாலாஜி வெளியே வந்ததற்காக அவர் காவல்துறைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஏதோ குற்றமற்றவர் என்று சொன்னதைப் போல பலர் பேசுகிறார்கள். இதில் தமிழகக் காவல்துறை ஒரு தந்திரம் செய்துள்ளது. 2 ஆயிரம் சாட்சிகளை அப்படியே குற்றவாளிகளாக மாற்றி இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி யாரிடம் எல்லாம் லஞ்சம் வாங்கினாரோ, அதை எல்லாம் திரும்பக் கொடுத்துவிடுவதாகக் கூறி சமரசம் பேசி இருந்தார். அதற்காக 3 வழக்குகள் உள்ளன. இதில் 2 வழக்குகளை காவல்துறை மூடிவிட்டது. பணத்தை திரும்ப அளித்துவிட்டார்கள் இதைச் செய்துவிட்டனர். ஒரு ஊழல் வழக்கையும் மூட இருந்தது.

ஆனால், வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர் பணம் திரும்ப தருவதாகக் கூறி வழக்கை திரும்பப் பெறவைத்த செந்தில் பாலாஜி தங்களை இழுத்தடிக்கிறார் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி ராம சுப்பிரமணியன் இந்த வழக்கை ஆராயத் தொடங்கினார். அப்போதுதான் எப்படி லஞ்சப் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார் என்று வழக்கை எப்படி மூட முடியும் என்று கேள்வி எழுப்பி திரும்ப விசாரிக்க உத்தரவிட்டார். அதனால் மூடப்பட்ட 3 வழக்குகள் மீண்டும் உயிர்பெற்றன.

ஆகவே வழக்குக்குள் இடி வந்தது. செந்தில் பாலாஜியின் 1.34 கோடி வங்கிக் கணக்கிலிருந்தது. மனைவி பெயரில் நிறையப் பணம் இருந்தது. இடி விசாரணையில் 67 கோடி முதலீடு செய்ததைக் கண்டுபிடித்தது. அதை வைத்துத்தான் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் காவல்துறை என்ன செய்தது என்றால், லஞ்சம் கொடுத்து வேலை பெற முயன்றவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏனெனில் லஞ்சம் பெறுவது குற்றம் என்றால், லஞ்சம் தருவதும் குற்றம். அதை வைத்து காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதனால் என்ன நடக்கும்? பாதிக்கப்பட்டவர்கள் வழக்கைத் திரும்பப் பெற வாய்ப்பும் உள்ளது.

அடுத்து இந்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் போட்டுள்ளதாக 2 ஆயிரம் பேருக்கும் வழக்கறிஞர் வைக்க வேண்டும். அனைவரையும் குறுக்கு விசாரணை செய்யவேண்டும். ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிகை பதிய வேண்டும். இதற்காக 2 ஆயிரம் பேரும் நீதிமன்றத்தில் வாதிடவேண்டும். இது காவல்துறை செய்த சதி என்பது என் கருத்து. செந்தில் பாலாஜி வழக்கை இந்த 2 ஆயிரம் குற்றவாளிகளாக வைத்து வழக்கை நடத்தவே முடியாது.

senthil balaji dmk

ஒருவர் சாதி சான்றிதழ் கேட்கிறார். அதிகாரி அதற்கு லஞ்சம் கேட்கிறார். அதை வாங்குவதற்காக அதிகாரமே இல்லாத ஒரு ஏழை பணம் கொடுக்கிறார். ஆகவே லஞ்சம் கொடுத்தார் என அவர் மீது வழக்குப் போட முடியுமா? இதை நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். வருங்காலத்தில் இந்த வாதம் நீதிமன்றத்தில் கட்டாயம் முன்வைக்கப்படும். ஆனால், இப்போதைக்கு உச்சநீதிமன்றம் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு உள்ளது. 600 சாட்சியங்கள் உள்ளன.

இந்த வழக்கு எப்படிப் பார்த்தாலும் 4 ஆண்டுகளாகும். பண மோசடி வழக்கில் ஜாமின் வழங்க 2 விதிகள் உள்ளன. ஒன்று, குற்றஞ்சாட்டப்பட்டவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதை நீதிமன்றம் நம்ப வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர் வெளியே சென்றால் மறுபடியும் அந்தத் தவறை செய்யமாட்டார் என்பதை ஏற்கும்படி வாதம் இருக்கவேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் என்ன சொல்லி இருக்கிறது என்றால்? அவர் ஏற்கெனவே 400 நாட்களுக்கு மேலாக சிறையிலிருந்துள்ளார். இன்னும் 4 ஆண்டுகள் வரை வழக்கு முடிய வாய்ப்பு இல்லை. பண மோசடி வழக்கு 2 விதிகளைக் காரணம் காட்டி அவரை உள்ளேயே வைக்க முடியாது. இதை விட அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமை முக்கியமானது. ஆகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குகிறோம் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே செந்தில் பாலாஜி தவறு செய்யவில்லை. அவர் புனிதர். எனவே அவருக்கு ஜாமின் வழங்குகிறோம் என்று நீதிமன்றம் ஒரு இடத்தில்கூட சுட்டிக்காட்டவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+