Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவத்தில் இருந்தாரா! "கேப்டன்" பெயரை விஜயகாந்த் யூஸ் பண்ண கூடாது! ஐகோர்ட் வழக்கு பற்றி தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த்திற்கு கேப்டன் என்ற புனை பெயர் நிலைத்துப் போனது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர்ந்தது குறித்து நாம் பார்க்கலாம்.

விஜயகாந்த்திற்குப் புரட்சிக் கலைஞர், கருப்பு எம்.ஜி.ஆர், சொக்க தங்கம் என பல்வேறு புனை பெயர்கள் உள்ள போதிலும் கேப்டன் என்றே பலரும் அவரை அழைப்பார்கள். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கூட கேப்டன் என்று அவரை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

 A case was filed against Vijayakanth for his moniker Captain

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதும் கூட பலரும் அவரை கேப்டன் என்றே குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், கேப்டன் என்ற பெயரை ராணுவ வீரர்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சமயத்தில் வழக்கு தொடரப்பட்டது பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

ராணுவ அதிகாரி: விஜயகாந்த் படங்களில் ராணுவ அதிகாரி, போலீஸ் அதிகாரி ஆகிய கேரக்டர்களில் நடித்து பயங்கரவாதிகளைக் கதறவிட்டாலும் அவர் உண்மையில் ராணுவத்தில் பணிபுரிந்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ராணுவத்தில் பணிபுரியாத ஒருவர் கேப்டன் என்ற பட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.. அது சட்டவிரோதமானது என்று தண்டபாணி என்ற முன்னாள் ராணுவ வீரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

படங்களில் ரஜினி! அரசியலில் கிட்டத்தட்ட எம்ஜிஆர்! கேப்டன் விஜயகாந்த் சாதித்ததும் சந்தித்த சறுக்கல்களும்

கடந்த 2014இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில இதழ் இது குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தது. ஐகோர்ட்டில் அளித்த புகாரில், "அவர் ஒரு நடிகர். எனக்குத் தெரிந்தவரை, அவர் ஒருபோதும் இந்திய ராணுவத்தில் பணிபுரியவில்லை. அப்படி இருக்கும் போது அவர் 'கேப்டன்' என்ற வார்த்தையை மோசடியாகப் பயன்படுத்துகிறார். இது சட்டவிரோதமானது.. இந்திய ராணுவத்தின் மரியாதை மற்றும் மரியாதையை அவமதிக்கும் செயலாகும்" என்று புகார் அளித்திருந்தார்.

புரட்சிக் கலைஞர்: தமிழ் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் புனை பெயர்கள் இருக்கும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல் தளபதி விஜய் வரை, தமிழ் நட்சத்திரங்கள் அனைவருக்கும் புனை பெயர்கள் இருக்கும். கூலிக்காரன் படத்தில் நடித்த போது விஜயகாந்த் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டார். இருப்பினும், குறுகிய காலம் மட்டுமே அது இருந்தது.

கேப்டன்: தொடர்ந்து 1991இல் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது விஜயகாந்த்தின் 100ஆவது திரைப்படம் ஆகும். அதற்கு முன்பு வரை உச்ச நட்சத்திரங்களுக்கு 100ஆவது படம் ஓடாத நிலையில், இந்த படம் மெகா ஹிட் அடித்தது.. ஐஎஃப்எஸ் அதிகாரியாக நடிக்கும் விஜயகாந்த், காட்டில் இருக்கும் கடத்தல்காரரைப் பிடிப்பதே இந்த கதை.

இந்த படம் விஜயகாந்த் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக முடிந்தது,. அதன் பின்னரே கேப்டன் விஜயகாந்த் என்ற பெயர் நிலைத்து நின்றது. அரசியலில் வந்த போதும் இந்த புனை பெயர் அவருக்கு மிக பெரியளவில் உதவியது. பல ஆண்டுகள் அவர் கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்டு வந்தார். இருப்பினும், அப்போது எந்த வழக்கும் இல்லை. 2014இல் தான் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வாதம்: அப்போது இயக்குநர் ஆர்கே செல்வமணி இந்த விவகாரத்தில் விஜயகாந்த்திற்கு ஆதரவாகப் பேசினார். ஆர்கே செல்வமணி, "ஒரு நட்சத்திரத்தை கேப்டன் என்று அழைப்பதில் தவறில்லை.. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கேப்டன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அவர் தன்னை தானே ஒரு போதும் கேப்டன் அழைத்ததில்லை. பொதுமக்களும் அவரது ரசிகர்களும் தான் அப்படி அழைத்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் என்ன ஆனது, வழக்கு எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எங்கும் தெரிவிக்கப்படவில்லை, இந்த செய்தியை வெளியிட்ட அந்த ஆங்கில ஊடகம் தொடங்கி எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகவில்லை. இருப்பினும், அதன் பின்னரும் பொதுமக்களும் ரசிகர்களும் அவரை 'கேப்டன்' என்றே தொடர்ந்து அழைத்து வந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+