Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வீடு.. நோ புரோக்கரில் வெளிப்படையாகவே வந்த விளம்பரம்.. முஸ்லிம் மக்கள் கவலையுடன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு எல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க.. இன்று எல்லாம் யார் சார் மதம் பார்க்கிறார்கள் என்று சொல்பவர்கள் அதிகம். சாதி, மத வேற்றுமை இல்லாத ஒற்றுமையான தமிழ்நாட்டில் இன்னும் சிலர், வாடகைக்கு வீடு விடும் விவாகரத்தில் வேற்றுமை பார்க்கிறார்கள். ஒருவர் என்ன சாதி, என்ன மதம் என்பதை கேட்டுவிட்டு விடுவதும் நடக்கிறது. முஸ்லிம்களை தவிர என்று ஒரு விளம்பரம் வெளிப்படையாக நோ புரோக்கரில் வீட்டின் உரிமையாளர் கொடுத்திருக்கிறார். இதுபற்றி சமூக வலைதள பிரபலம் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஏராளமான இஸ்லாமியர்கள் வீடு கிடைக்காமல் அவதிப்பட்டதை பதிவிட்டுள்ளார்கள்.

இன்றைக்கு வாடகைக்கு வீடு தேடுவது, லீசுக்கு வீடு தேடுவது என்பது தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் தொடங்கி சிறிய கிராமங்களில் கூட அதிகரித்துவிட்டது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் , நமக்கு பிடித்த மாதிரி நல்ல வீடு, வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது என்பது சவாலானது.

a chennai house owner has placed an advertisement on No Brokers except for Muslims

சென்னையில் எங்கு வாடகை அதிகம்

சென்னையில் குறைந்த வாடகை, நல்ல வசதி, போக்குவரத்து இணைப்பு என எல்லாம் சேர்த்து கிடைப்பது மிக அரிது. வாடகை மிக மிக அதிகமாகவே இருக்கிறது. ஒரு bhk வீடு சென்னையின் மையப்பகுதிகளில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் வரை போகிறது. 2 bhk வீடு என்பது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கிறது.. அதுவும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகளில் வீட்டின் வாடகை மிக அதிகமாக இருக்கும்.

சாதியை கண்டுபிடிக்கும் வழி

சென்னையில் வீட்டு வாடகை ஒருபுறம் எனில், சென்னையில் நல்ல வீட்டை தேடி கண்டுபிடிப்பதும் சவாலானது. ஏனெனில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வீடுகள் கிடைக்காது. நாம் தேடி தேடி அலைய வேண்டியதிருக்கும். அதிலும் ஏராளமான கண்டிசன்கள் இருக்கும். கண்டிசன்கள் ஒருபுறம் எனில், இவர்கள் மட்டும் அணுகலாம் என்று pure veg போடு போட்டிருப்பார்கள். அடுத்தாக சில பகுதிகளில் சில குறிப்பிட்ட சாதியினர் என்றால் மட்டும் வீடு இல்லை என்பார்கள். ஒருவரிடம் வெளிப்படையாக எந்த சாதி என்று கேட்பதற்கு பதிலாக, உங்கள் பூர்வகம் எங்கு என்று கேட்பதும், சென்னையில் எங்கு பிறந்ததீங்க என்று கேட்டும் அவர்களின் சாதி அடையாளத்தை கண்டுபிடித்து நாசுக்காக சிலர் வீடு இல்லை என்று மறுத்து விடுகிறார்கள்.

இஸ்லாமியர்கள் கவலை

அதேபோல் தான் இஸ்லாமியர்களும் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். வாடகை, பொருத்தமான வசதி எல்லாம் இருக்கிறதே என்று போய் கேட்டால், எல்லாம் ஓகே என்று சொல்லிவிட்டு, இறுதியாக இஸ்லாமியர்கள் என்று அறிந்த உடன், ஏற்கனவே ஒருவர் வந்து கேட்டிருக்கிறார். கேட்டு சொல்கிறேன். அப்படி இப்படி மழுப்பலாக கூறி சிலர் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. எல்லாரும் அப்படி இல்லை என்றாலும், சிலர் வீடு விடுவதில் இஸ்லாமியர்களுக்கு பாரபட்சம் பார்ப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

நோ புரோக்கரில் வந்த விளம்பரம்

சென்னையில் கதீஜா என்ற சமூக வலைதளப்பிரபலம் ஒருவர் வெளியிட்ட பதிவில், "தங்கச்சி குடும்பம் வாடகைக்கு இருக்க வீடு தேடிட்டு இருக்காங்க.. No brokerல செக் பண்ணிட்டு இருந்தேன். ஆரம்பமே அமர்க்களம். இதான் வளர்ச்சிக்கான வழி. இனி எப்படி தீவிரவாதிகள் உருவாகுரானுங்கனு பார்ப்போம்" என்று வேதனையுடன் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அந்த விளரம்பத்தில் இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஒரு சென்னை வளசரவாக்ககத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் வெளிப்படையாக விளம்பரம் செய்திருந்தார். இதனை கண்டித்து அந்த பெண் பிரபலம் பதிவிட்டிருந்தார்,

ஈரோட்டில் சம்பவம்

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், மகனோட ட்ரைனிங் காக, ஈரோட்டில் வேலை ஒருவருடம் பார்க்கனும் என்றதால், ஈரோட்டிற்கு போனோம்.. ஆனா அத்தனை இலகுவாய் மல்லிக்கு வீடு கிடைக்கல. அதுவும் பெரியார் மண்ணில்.. முஸ்லீமா இல்லம்மா வீடு.
நின்ன இடத்துல தண்ணி ஊத்தி கழுவினாங்க..

பல வீடுகளில் வாசலில் தொங்கும் போர்ட் பார்த்துதான் வீடு பார்க்க வந்தேன். இனி போர்டில் பாயம்மா பாயய்யாகளுக்கு மட்டும் இங்கு வீடில்லை. மற்றோர் அனுகவும் என எழுதிப்போடுங்கள் என்று..சொல்லி விட்டுவந்தேன்

ஒரு தெருவில் ஓய்வுபெற்ற பெண் __ அதிகாரி ஒருவர் வீடு இல்லம்மா முஸ்லீம்களுக்கு வீடு கொடுப்பதில்லை ஒருவரை என் கொல்லைப்புறத்தில் தங்க வச்சிருக்கேன்.. இந்த வீட்டில் உங்களுக்கு தர தோணுது இருந்தாலும் உங்க அம்மா அப்பாவைதவிர உறவுகள் வரக்கூடாது அது இதுன்னு 1108 கண்டிஷன் அடபோம்மா நீயும் உன்வீடும் என வந்துட்டேன். அதே தெருவில் போய் குடியேறினேன். ஒரு வருடத்திற்குள் 5/6 முஸ்லீம் குடும்பம் அங்கு வந்துட்டாங்க. என்னத்த சொல்ல முத்திரை குத்தியாச்சு இனி அழிப்பதெல்லாம் முடியாத காரியம்.." என்று வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார்,

சென்னையில் வீடு

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் நான் சென்னையில் வீடு தேடும் போது இதே நிலை தான் வீட்டு வாசலில் வீடு வாடகைக்கு என்று பலகை இருந்தது சரி என்று தொடர்பு கொண்டேன் உள்ளே வாங்க என்று சொன்னவர் இரண்டு பெட் ரூம் இருக்கு, தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு என்று சொல்லி விட்டு நானும் வாடகை விவரம் எல்லாம் கேட்ட பின்பு, அவர் என்னிடம் கேட்டார், நீங்க முஸ்லிமா என்று.. நான் ஆமாம் என்று சொன்னேன். அதன் பின் அவர் வீடு ஏற்கனவே இருக்கிறவர்கள் காலி ஆக வில்லை.. அதனால் சொல்கிறேன் என்று என்னை அனுப்பி விட்டார் நானும் வெளியே வருகிறேன்... எனக்கு காதில் விழுகிறது அவர் அவர் மனைவியிடம் பேசுவது முஸ்லிமா கேட்டு வராங்க வீட்டை என்று.. அவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக தான் மலுப்பலான பதிலை சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது" என்று தனது வேதனையை பதிவிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+