Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் போடீ.. புற்றுக்கு வந்து பால், முட்டை வைக்கிறேன்.. நாகப்பாம்புவிடம் சத்தியம் செய்த பெண் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிற்குள்ளே வந்த நல்லப்பாம்பை அடிக்காமல் அன்பாக பெண் ஒருவர் வெளியே அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    தங்கம் போடீ.. புற்றுக்கு வந்து பால், முட்டை வைக்கிறேன்.. நாகப்பாம்புவிடம் சத்தியம் செய்த பெண் வீடியோ

    பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இதனால் இன்று வரை பாம்பு வந்துவிட்டால் சிலர் பாம்பாட்டியை அழைத்தோ அல்லது பாம்பு நல ஆர்வலரையோ அழைத்து பாம்பு பிடித்து விடுகிறார்கள். பின்னர் அதை காப்பு காட்டிலோ அல்லது வனத்திலோ கொண்டு போய் விட்டுவார்கள்.

    ஆனால் பெரும்பாலானோர் அந்த பாம்பை அடித்து கொல்வதைத்தான் நோக்கமாக கொண்டிருப்பர். இன்று பாம்புகள், வன விலங்குகளுக்கு சொந்தமான இடங்களில்தான் நாம் வீட்டை கட்டி கொண்டு குடியிருக்கிறோம்.

    சொந்தமில்லாத நிலை

    சொந்தமில்லாத நிலை

    ஒரு விலங்கு இரைதேடி வெளியே சென்றுவிட்டு வந்து பார்ப்பதற்குள் அதன் வசிப்பிடம் அதற்கு சொந்தமில்லாத நிலை உள்ளது. எல்லா விலங்குகளும் தங்களை தற்காத்து கொள்ள போராடுகின்றன. அது போல்தான் பாம்புகளும்! மனிதர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் அவை விஷத்தை மனிதன் மீதோ சக விலங்குகள் மீதோ உமிழ்கின்றன.

    பாம்பு

    பாம்பு

    இதனால் இறப்புகள் நேரிடுகின்றன. எந்த பாம்பும் நம்மை தேடி வந்து கடிப்பதில்லை. அதன் மீது நாம் காலை வைத்துவிட்டாலோ அல்லது அதன் வம்புக்கு நாம் சென்றாலோ தன்னை தற்காத்துக் கொள்ள இது போன்று செய்கிறது. ஆனால் வனத்துறையினரும் விலங்குகள் நல ஆர்வலர்களும் பாம்பு உள்ளிட்ட அச்சுறுத்தும் ஊர்வன மற்றும் விலங்குகளை கண்டால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

    பாம்பு

    பாம்பு

    ஆனால் பெரும்பாலானோர் கேட்பதில்லை. வீட்டுக்கு பாம்பு வந்துவிட்டால் அது வந்தவழியே போய்விடும் என்பதை புரிந்து கொள்ளாமல் அதை துடிக்க துடிக்க அடித்து பின்னர் கொளுத்தி போட்டால்தான் அவர்களின் மனம் ஆறும். இன்னும் சிலர் நல்ல பாம்பை அடித்துவிட்டால் உடனே அது எரிந்த சாம்பல் மீது பாலூற்றி தங்கள் பாவ கணக்கை தீர்க்க நினைப்பர்.

    வனத்துறை அதிகாரி

    வனத்துறை அதிகாரி

    ஆனால் வனத்துறை அதிகாரி சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பை மிகவும் பொறுமையாக கையாண்ட இந்த இரக்கமுள்ள பெண் யார் என தெரியவில்லை. ஆனால் அவருக்கு நமது பாராட்டுகள். இது போன்று காட்டு விலங்குகளையும் மதிக்கும் குணம் பலருக்கு தேவைப்படுகிறது என கூறி வீடியோ போட்டுள்ளார்.

    தமிழகத்தில் எடுத்த வீடியோ

    தமிழகத்தில் எடுத்த வீடியோ

    அதில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான். வீட்டு கேட்டை தாண்டி சிறிய நல்லப்பாம்பு ஒன்று வந்துவிட்டது. பெண் ஒருவர் கையில் குச்சியுடன், "எல்லாரும் பயப்படுறாங்க போடி தங்கம் போடி. உனக்கு பாலும் முட்டையும் உன் புற்றில் வந்து நான் ஊத்துறேன். போடி தங்கம் என குச்சியால் அந்த பாம்பை மெதுவாக வெளியே செல்ல வைக்கிறார்.

    இரும்பு கேட்

    இரும்பு கேட்

    சிறிய பாம்பு படம் எடுத்தப்படியே அவர் சொல்வதை கேட்டு வெளியே செல்கிறது. அப்போது இரும்பு கேட்டை திறந்த அந்த பெண் "நீ இப்போது போ, நான் உனக்கு சத்தியமாக பால் ஊற்றுகிறேன். சத்தியமா வரேன், போய்ட்டு வா. இனி இந்த பக்கமே நீ வரக் கூடாது" என்கிறார். அந்த பாம்பு அவரை பார்த்தபடியே ரிவர்ஸில் மெல்ல ஊர்ந்து செல்கிறது. பின்னர் சிறிது தூரம் கழித்து பாம்பு முன்னோக்கி சென்றுவிடுகிறது.

    குழந்தையிடம் பேசுவது போல்

    அந்த பெண் ஏதோ குழந்தையிடம் பேசுவது போல் அந்த பாம்பிடம் பேசி அதை வெளியேற்றி அனுப்பியுள்ளார். அதுவும் நம்மை போல் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும். இது போல் காட்டு விலங்குகளை அழித்துவிட்டால் பின்னர் வனங்கள் எப்படி செழிப்பாக இருக்கும்? இந்த வீடியோவை பார்த்த பலர் பாம்பு பால் குடிக்காது. அது குடித்தால் அதற்கு செரிக்காது என்கிறார்கள்.

    பலர் புனிதம்

    நல்ல பாம்புகளை பலர் புனிதமாகவும் தெய்வ வடிவிலும் பார்க்கிறார்கள். எனவே அதை கொல்ல மாட்டார்கள்.

    சத்தியம்

    புற்றுக்கு பால் ஊற்ற வருகிறேன் என சத்தியம் செய்வதெல்லாம் மிகவும் சிறப்பானது. நம்பினால் கடவுள் எங்கும் இருக்கிறார்.

    பின்னோக்கி சென்ற பாம்பு

    அந்த பாம்பும் அந்த பெண்ணுக்கு மரியாதை கொடுத்தவாறே பின்னோக்கி செல்கிறது.

    இந்த வீடியோவில் இருக்கும் பெண் போல் அனைவரும் வன விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும். நம்மை பார்த்தவுடனே அதாகவே பயந்து ஓடி ஒளியும் தன்மை கொண்டது. ஆனால் அதை எப்படியாவது அடித்தே தீர வேண்டும் என நினைக்கும் போது பல நேரங்களில் மனிதர்களை கடித்து விடுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+