சாலையில் கட்டுக் கட்டாக பணம்.. நங்கநல்லூர் உமாபாரதி செய்த சூப்பர் செயல்.. குவியும் பாராட்டு
சென்னை: சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி உமாபாரதி என்பவருக்கு சாலையில் கிடைத்த பை ஒன்றில், 2 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அவர் செய்த செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டடத் தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு ரூ. 2 லட்சம் அடங்கிய பணப்பை ஒன்று கிடைத்துள்ளது. அதனை மீட்டு போலீஸில் ஒப்படைத்த, உரியவரிடம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர் உமாபாரதி. இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை உமாபாரதி எடுத்து பார்த்துள்ளார். அந்தப் பையில், ரூ. 2 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பணத்தை யாரோ ஒருவர் தவறவிட்டுள்ளனர் என்பதை அறிந்த உமாபாரதி, உரியவரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
அப்பகுதியில் உள்ளவர்களிடம் பை எதாவது கேட்டு யாராவது வந்தார்களா என்று அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால், பையை கோரி யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து, உடனடியாக பணப்பையுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
சாலையில் கிடைத்த பணப் பையை போலீசாரிடம் உமாபாராதி ஒப்படைத்தார். இதையடுத்து, பணப் பையை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் செல்போன் எண் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போலீசார், பணத்தை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சாலையில் கிடைத்த பையில் இருந்த பணத்தைப் பார்த்ததும் தனக்கென கிடைத்தது என எடுத்துக் கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட கட்டடத் தொழிலாளி உமாபாரதியின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. பணத்தை ஒப்படைத்ததற்காக கட்டிட தொழிலாளி உமாபாரதியின் நேர்மையைப் பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications