நாராயணப்பா தாத்தாவிடம் கவுடாவா? என கேள்வி கேட்ட ஸ்டாலின்... சர்ச்சையாக்கப்படும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு வீடியோவையும் முன்வைத்து ஏதேனும் ஒரு சர்ச்சையை கிளப்புவது என்பது வழக்கமாகிவிட்டது.

சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இது தொடர்பாக ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

A controversy created against MK Stalin with Video

இப்பேரணியில் பங்கேற்ற 89 வயது நாராயணப்பா தாத்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து ஸ்டாலின், சிறப்பித்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை வைத்துதான் இப்போது சர்ச்சையாக்கப்படுகிறது. நாராயணப்பா தாத்தா ஸ்டாலினிடம் வெகு யதார்த்தமாக ஏதோ சொல்கிறார்.. (கன்னடத்தில் சொல்வது போல் உள்ளது)

அப்போது எந்த ஊர்? என ஸ்டாலின் இயல்பாகவே கேட்கிறார்.. ஓசூர் என நாராயணப்பா பதில் கூறிய உடனேயே 'கவுடாவா' என கேள்வி கேட்டபடியே அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்கிறார் ஸ்டாலின்.

இதனை மையமாக வைத்துதான் நாரயணப்பா தாத்தாவிடம் ஜாதியை கேட்டுவிட்டார் ஸ்டாலின்... திமுக ஜாதிய கட்சி என்பதை நிரூபித்துவிட்டது என்கிற பிரசாரத்தை படுதீவிரமாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+