சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி விபத்தில் சிக்கிய அதே இடம்.. தம்பதியின் உயிரை பறித்த மாதவரம் ரவுண்டானா
சென்னை: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இதே இடத்தில் தான் இருசக்கர வாகனத்தில் சென்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வத்தின் மனைவி இரண்டு கால்களை இழந்த நிலையில் அவரது தோழி, கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். தொடர்ந்து லாரிகளால் விபத்து நடந்து வரும் இடமாக மாதவரம் ரவுண்டானா இருக்கிறது.
வட சென்னையைச் சேர்ந்தவர்களுக்கும், ஆந்திராவை நோக்கி செல்பவர்களுக்கும் மிக நன்றாக தெரிந்த ஒரு இடம் என்றால் அது மாதவரம் ரவுண்டானா. இந்த இடம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்த இடத்தை கடந்து தான் சென்னையில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்கள் செல்லும் லாரிகள், துறைமுகம் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் செல்ல வேண்டும்.

மாதவரம் ரவுண்டானா என்பது கோயம்பேட்டில் இருந்து நேராக வரும் வாகனங்கள், அந்த பக்கம் மணலியில் இருந்து வரும் வாகனங்கள், வியாசர்பாடி, மூலக்கடை பாதையில் வரும் வாகனங்கள, ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் என நான்கு முனை சந்திப்பாக உள்ளது. இந்த இடம் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிவருகிறது. இங்கு லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அண்மையில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கன்டெய்னர் லாரியில் சிக்கி விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவன பெண் அதிகாரி சொர்ணலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தோழியான ஐஏஏஸ் அதிகாரி செல்வம் என்பவரின் மனைவி பிரபாவிற்கு 2 கால்களும் நசுங்கியது.
இந்த விபத்து நடந்த ஓரிரு நாளிலேயே இன்று மீண்டும் விபத்து நடந்துள்ளது. மாதவரம் நான்கு வழிச் சாலை ரவுண்டானா அருகே இன்று காலை, மஞ்சம்பாக்கம் டோல்கேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வழியில் வந்த சரக்கு லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டியில் வந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், விபத்து நடந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகப்படியான வாகன நெரிசல் காரணமாக இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் செல்வது சவாலானதாக மாறி வருகிறது. இண்டிக்கேட்டர் போட்டு வந்தாலும், போடாமல் வந்தாலும் பின்னால் வரும் பெரிய வாகனங்களின் வேகம் காரணமாக விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்லாதவாறு மாற்ற வேண்டும் என்றும், விபத்துக்களை குறைக்க மாற்றுவழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications