மெயின் ரோட்டில்.. காருக்குள் இளம்பெண்ணுடன் கசமுசா.. வசமாக சிக்கிய பல் டாக்டர்.. தப்பியோடிய இளம்பெண்
சென்னை: சென்னையில் காரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் டாக்டர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சதுப்பு நிலத்தை ஒட்டி புதர்போல் செடிகள் வளர்ந்து எப்போதும் அபாயகரமாக இருக்கும்.

போலீசார் ரோந்து பணி
மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும் அந்த பகுதியில் திருநங்கைகள் உள்ளிட்ட பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கடந்த 10-ந் தேதி இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் ள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

காருக்குள் கசமுசா
புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சொகுசு கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது இளைஞர் ஒருவர் காரில் இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த இளம்பெண் உடனடியாக கீழே இறங்கி இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார்
காரில் இருந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தான் தி.மு.க. எம்.பி. ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறியதுடன் காரில் ஒட்டி இருந்த எம்.பி.யின் கார் பாஸ் ஒன்றையும் போலீசாரிடம் காட்டியுள்ளார். இதனையடுத்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், அவர் கூறிய தி.மு.க. எம்.பி.யை தொடர்பு கொண்டு கார் பாஸ் குறித்து விசாரித்தார். தான் யாருக்கும் அதுபோல் கார் பாஸ் தரவில்லை என்று திமுக எம்.பி கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது செய்தனர்
இதையடுத்து அந்த அவர் இளைஞர் குறித்து விசாரித்தபோது மடிப்பாக்கத்தை ஷியாம் கண்ணன் (27) என்பதும், பல் டாக்டர் எனவும் தெரியவந்தது. ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து எம்.பி. பாசை வாங்கிய ஷியாம் கண்ணன், ஊரடங்கு காலத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் அதனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைந்தனர். அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தி.மு.க. எம்.பி. பெயரில் அவருக்கு போலி பாஸ் வழங்கியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications