கெட்டுப்போன சிக்கன்.. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
சென்னை: சென்னை கொடுங்கையூர் வாசுகிநகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பிரபல பிரியாணி கடைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கெட்டுப்போன சிக்கனை வழங்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரபல பிரியாணி கடைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை உள்பட தென் மாவட்டங்களில் புரோட்டா மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத ஒன்றாக பிரியாணி கடைகள் மோகம் சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னையில் காலையில், மதியம், இரவு, நள்ளிரவு, அதிகாலை என எல்லா நேரமும் பிரியாணி சாப்பிடுகிறார்கள். இந்த ஆர்வம் காரணமாக ஏராளமான பிரியாணி கடைகள் சென்னையில் முளைத்தபடி உள்ளன. அதேநேரம் பிரியாணி கடைகளை பொறுத்தவரை சில நேரங்களில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் வருகின்றன. அப்படி ஒரு புகார் பற்றி தான் பார்க்க போகிறோம்.

சென்னை கொடுங்கையூர் வாசுகிநகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "கடந்த 16.9.2024 அன்று கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பால்ஸ் வாங்கினேன். இந்த பிரியாணியை சாப்பிட்ட எனக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். சுகாதாரமற்ற, கெட்டுப்போன சிக்கனை வழங்கியதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பிரியாணி கடை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர் பிரியாணி வாங்கிய தினத்தன்று மேலும் 578 பேர் சாப்பிட்டு உள்ளனர். உடல்நல பிரச்சினை ஏற்பட்டதாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மனுதாரர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் நஷ்டஈடு கோருகிறார். எங்கள் கடை சென்னையில் மட்டும் 24 இடங்களில் செயல்படுகிறது. இதுவரை எந்த புகாரும் இல்லை" இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் வழக்கை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம், 'சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரியால் இந்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த பிரியாணி கடை உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததையும், சமையலறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.
கெட்டுப்போன உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் மேற்படி பிரியாணி கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரித்ததற்கு தெளிவான ஆதாரம் இருக்கிறது. எனவே, சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதேபோன்று ராதிகா என்பவர் இந்த கடை மீது தொடர்ந்த வழக்கில், அவருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications