காட்டாங்குளத்தூர் பள்ளியில்.. சிறுமிக்கு ஆசிரியரே பாலியல் டார்ச்சர்! இது சகஜம்! திமிராக பேசிய பள்ளி
சென்னை: காட்டாங்குளத்தூரில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றில் சிறுமிகளுக்கு அங்கே வேலை பார்க்கும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ளது வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி. பிரபல ஐடி நிறுவனம் ஒன்றிற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த பள்ளியில் அந்த ஐடி ஊழியர்களின் குடும்பத்து குழந்தைகள், அருகே உள்ளே குடியிருப்பை சேர்ந்த குழந்தைகள் பலரும் படிக்கிறார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த பள்ளியை சேர்ந்த சிறுமி ஒருவர்.. பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பெற்றோரிடம் புகார் கொடுத்துள்ளார். பிஞ்சு மனம் மாறாத அந்த யுகேஜி சிறுமி, தன்னை ஆசிரியர்கள் தவறாக தொடுவதாக புகார் அளித்துள்ளார்.
அதோடு அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் தவறான சில "செயல்களை" அவர்கள் செய்ததும் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியை சோதித்துவிட்டு அவரின் பெற்றோர் இதை பற்றி போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அதன்படி பி.இ.டி ஆசிரியர் ராசையா, மியூசிக் ஆசிரியர் காயேசுகுமார் குமார் ஆகியோர் சேர்ந்து பள்ளியில் வைத்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் பின்னர் தெரிய வந்தது.
இந்த விவகாரம் சிறுமி மூலம் பெற்றோருக்கு தெரியவர.. அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி ஆசிரியர்கள் மேலும் சிலர் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளது.
அதோடு வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி மாணவிகள் இன்னும் பலர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதை பற்றி விசாரிக்க சென்ற போலீசாரிடம் பள்ளியின் முதல்வர் சங்கரி திமிராக நடந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தட்டிக்கேட்ட பெற்றோர்களிடமும் முதல்வர் சங்கரி.. இதெல்லாம் சகஜம்தான். இயல்பா நடக்கற விஷயம்தான். குழந்தைங்க மேலேதான் தப்பு. எல்லாம் தப்பா வளர்ந்து இருக்காங்க.
இங்கே 3ம் வகுப்பு குழந்தைகள் கூட சுய இன்பம் செய்யுறாங்க.. குழந்தைங்க முதலில் சரியா இல்லை . அவங்களை முதல்ல கண்டிக்கணும். இதெல்லாம் வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னாடியே "பாலியல் உறவு" செய்வதால் நடக்கும் பிரச்சனை. அங்க தப்பா கத்துக்கிட்டு வந்து இப்போ எங்க மேலே பழியை போடுறாங்க. மற்றபடி ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்ட புகார்கள் எல்லாம் சகஜம் என்று அப்படியே புகார்களை பிஞ்சு குழந்தைகள் மீது திருப்பிவிட்டுள்ளார் பள்ளி முதல்வர் சங்கரி.
அதோடு விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக போலீசார் தற்போது பி.இ.டி ஆசிரியர் ராசையா, மியூசிக் ஆசிரியர் காயேசுகுமார் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். பள்ளி முதல்வர் சங்கரி இவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் அவரை நீக்க வேண்டும்.. அவரையும் கைது செய்ய வேண்டும்.. அவருக்கும் இதில் உடந்தை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications