Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் சென்னையின் வரலாற்று கனவு நிறைவேறுது.. பள்ளிக்கரணை ஒக்கியம் மகடுவில் நடக்கும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில், நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஐந்து வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கப்படும் மற்றும் அங்கு இருக்கும் பழைய பாலம், புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வளர்ச்சிக்காக ஒரு ஊர் தன் அடையாளத்தையே இழந்துள்ளது என்றால் அது பள்ளிக்கரணை தான். பள்ளக்கரணை ஏரி என்பது வெறும் பள்ளக்கரணை மட்டுமல்ல. அடையாறு தாண்டி அந்த பக்கம் மேடவாக்கம் வரை உள்ள அத்தனை இடங்களும் ஒரு காலத்தில் பள்ளிக்கரணை ஏரி பகுதி தான். அதாவது சென்னையின் ஐடி காரிடர் பகுதி முழுமையாக பள்ளிக்கரணை ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அமைந்துள்ளது.

chennai pallikarani bridge

சென்னையின் காஸ்ட்லியான இந்த தென்சென்னை பகுதிகள், மழைக்காலத்தில் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றன. இதற்கு ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணம் என்றால், மறுபக்கம் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணமாகும். இதேபோல் பள்ளிக்கரணை ஏரி என்பது கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது பூஜ்ஜியம் என்கிற அளவில் உயரத்தில் இருக்கிறது. பள்ளிக்கரணை ஏரியில் தண்ணீர் முழுமையாக நிரம்பி அதன்பின்னர் தண்ணீர் வெளியேறினால் தான், அது ஒக்கியம் மடுவு வழியாக கடலை நோக்கி செல்லும்.

இதேபோல் பள்ளிக்கரணை அல்லது வேளச்சேரியில் இருந்து நேரடியாக கடலுக்கு எந்த கால்வாயும் இல்லை.. இதனால் பல கிலோ மீட்டர் பயணிக்கும் வெள்ளம், இறுதியாக முட்டுக்காடு வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த கால்வாய் அனைத்தையும் அரசு இப்போது மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏனெனில் தென்சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இந்த கால்வாய் மிக முக்கியம் ஆகும்.

மிக்ஜாம் புயல்: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நிரம்பிய ஏரிகள் மீது தொடர்ந்து 36 மணிநேரம் பெய்த மழை, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஏனெனில் பல்லாவரத்தை அடுத்த கீழ்கட்டளை முதல் நாராணயபுரம் ஏரி வரை உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகிய அளவில் உள்ளது.

வேளச்சேரி வெள்ளம்: இதனால் அதிகப்படியான தண்ணீர் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த வெள்ளம் கடந்த ஆண்டு மோசமான பாதிப்பு ஏற்பட்டுத்த இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதாடின ஒக்கியம் மடுவு பாலம்.. ஒக்கியம் மடுவு பாலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு பாதை மிக சிறிய அளவில் இருந்தது. இதுவும் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப போக முடியாததால் தண்ணீர் தேங்கி, வெள்ளமாக மாறியது.

ஒக்கியம் மடுவு பாலத்தின் நிலை என்ன: அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாததும், பாலத்தில் நீர்வழிப்பாதை நீளமும், பாலத்தின் உயரம் குறைவாக இருந்ததே காரணம் என கண்டறிந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழியை சுத்தம் செய்யும் பணி செய்தார்கள்.

ஐந்து வழிச்சாலை பாலம்: இந்நிலையில், ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் புற பகுதியை சரிசெய்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதை 80 மீட்டரில் இருந்து 200 மீட்டர் நீளத்திற்கும், பாலத்தின் உயரத்தை 1.5 மீட்டர் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, நீர்வழி பாதை விரிவாக்கம் மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒக்கியம் மடுவு பாலத்தின் 2 பக்கங்களிலும் மேற்கொண்டு 2 வழிச்சாலைக்கான அடித்தள பணிகள் நிறைவடைந்திருக்கிறது.

நீர்வழி பாதை: நீர்வழி பாதையை சுத்தம் செய்யும் பணியையும் மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக சுத்தம் செய்திருக்கிறது. பருவமழை காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பாலம் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது என்றும், பருவமழைக்கு பின்னர் மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாலம்: இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரெயில், நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஓக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஐந்து வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கப்படும் மற்றும் அங்கு இருக்கும் பழைய பாலம், புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும்.

ஐந்துவழிச்சாலை: டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரிசெய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இருபக்கங்களிலும் மூன்று கூடுதல் வழிச்சாலைகளுக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.

சென்னை மெட்ரோ தகவல்: இரண்டு பக்கங்களிலும் இரண்டு வழிசாலைக்கான அடித்தள வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஒக்கியம் மடுவு நீர்வழியை சுத்தம் செய்வது சென்னை மெட்ரோ இரயிலின் முக்கியப் பொறுப்பாக இருந்தது, தற்போது அதுவும் முடிவடைந்துள்ளது, மேலும் பருவமழை காலத்தில் அதிக நீர்வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 14, 2024 அன்று பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டதை சென்னை மெட்ரோ ரயில் குறிப்பிட விரும்புகிறது. மழைக்கு முன்பும் பின்பும் எடுத்த படங்கள், நீர்வழியின் மேம்பட்ட திறனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது , மேலும் வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. பருவமழைக்கு பிறகு மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+