இதுதான் டைம் ட்ராவலா? 23ம் தேதி புனேவில் ஏறி.. 22ம் தேதி சென்னைக்கு வந்த பயணி.. அதெப்படி சாத்தியம்?
சென்னை: புனேவில் இருந்து சென்னைக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் புதிய விதமான குளறுபடி ஒன்றை பற்றி அவர் விளக்கமாக பேசி உள்ளார். சென்னையை சேர்ந்த சுஜாதா என்ற அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், நான் சுஜாதா.. சென்னையில் இருந்து பேசுறேன். எனது கணவருக்காக 22ம் தேதி காலை புனேவில் தட்கல் டிக்கெட் புக் செய்தோம். 23ம் தேதி புனேவில் அவர் இருக்கிறார். அங்கே ரயில் ஏற வேண்டும். 24ம் தேதி அவர் சென்னையில் இறங்க வேண்டும். இதுதான் புக்கிங்கில் காட்டியது.

ஆனால் டிக்கெட் எடுத்து அதை பிரிண்ட் செய்த பின் அதில் சென்னையில் இறங்கும் தேதி 22ம் தேதி என்று இருந்தது. அதாவது 23ம் தேதி புனேவில் அவர் ஏறி பயணம் செய்து 22ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்று போட்டுள்ளது. இது சாதாரண தவறு என்று நீங்கள் நினைக்கலாம்.
அவர் பாதுகாப்பாக வந்துவிட்டார் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் ரயில் பயணத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் சிக்கல் ஆகிவிடும்., விபரீதம் ஏதாவது நடந்தால் என்ன செய்வது. ரயிலில் தீ பிடித்து ஏதாவது நடந்து நாங்கள் போய் விசாரித்தால் டிக்கெட் கேட்பார்கள். அவர் 22ம் தேதியே இறங்கிவிட்டார் என்று டிக்கெட்டில் இருந்தால் அதை எப்படி ஏற்பார்கள்.
அவர் முதல் நாளே இறங்கிவிட்டார் என்று எப்படி சொல்ல முடியும். இது சிறு தவறு கிடையாது. அரசு பணிகளில் இருப்பவர்கள் இந்த தவறுகளை ஏன் செய்கிறீர்கள். அரசு பதவி பொறுப்பான பதவி. ரயில்வே பதவி மிக மிக பொறுப்பான பதவி. அந்த பதவியில் இருப்பவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்.
என் கணவருக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் என்ன செய்ய முடியும். நான் போய் விசாரித்தால் உங்கள் கணவர் 22ம் தேதியே இறங்கிவிட்டார் என்று சொல்ல மாட்டார்களா? ஆனால் அவர் ரயில் ஏறியதே 23ம் தேதிதான் என்பதை எப்படி சொல்வது. ஏறும் நேரம், இறங்கும் நேரம் டிக்கெட்டில் சரியாக இருக்க வேண்டும். அதுதான் ஒருவர் பயணம் செய்வதற்கான ஆதாரம்.
ஒரு பயணி சரியாக ஏறினாரா, இறங்கினாரா என்பதை சரியாக காட்டுவது டிக்கெட்தான். அந்த டிக்கெட்தான் ஒருவர் பயணம் செய்ததற்கான ஆதாரம். அப்படி இருக்க நாங்கள் யாரிடம் சென்று விசாரிக்க முடியும். நான் போய் விசாரித்தால் உங்கள் கணவர் 22ம் தேதியே இறங்கிவிட்டார் என்று சொல்ல மாட்டார்களா? இது சின்ன தவறு கிடையாது.
இதெல்லாம் பயணத்திற்கான ஆதாரம். இப்போது பிரச்சனை இல்லை என்பதால் ஓகே. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன ஆகும்? ரயில் பயணத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் சிக்கல் ஆகிவிடும்., விபரீதம் ஏதாவது நடந்தால் என்ன செய்வது
எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள். ஒருவர் இறங்கினாரா என்பதை உறுதி செய்ய டிக்கெட் அவசியம். ஏதாவது பிரச்சனை நடந்து புகார் அளிக்க சென்றால் என்ன செய்ய முடியும். இதை எல்லாம் உடனே சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்சனையில் எல்லாம் முடியும், என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications