சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில்.. சட்டென பார்த்தால் ஷாக்.. திரண்டு நின்று.. ஸ்டன் ஆன மக்கள்
சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் இன்று மாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சுற்றி சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் சில மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன. இந்த கடல் பகுதிகள் அசுத்தமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படும். இருந்தாலும் இந்த கடல் பகுதிகளை பாதுகாக்க, இங்கே இருக்கும் மீன் வளங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த பேமஸான கடற்கரைகள் போக மற்ற சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் போன்ற கடற்கரைகள் மக்கள் குறைவாக செல்லும் கடற்கரைகள் ஆகும்.
மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல சிலர் மட்டும் நீலாங்கரை செல்வது வழக்கம். அதேபோல் பிரபலங்கள் பலரின் வீடுகளும் நீலாங்கரை கடற்கரை பகுதியில்தான் அமைந்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் சமீப நாட்களாக சென்னையில் உள்ள கடற்கரைகளில் அதிசய சம்பவம் ஒன்று நடக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடலுக்கு நடுவே டால்பின்கள் தோன்றி வருகின்றன. ஒன்று, இரண்டு என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் இங்கே வர தொடங்கி உள்ளன. கரைக்கு அருகே நீச்சல் போட்டுவிட்டு அதன்பின் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளன.
சென்னை கடற்கரை பகுதியில் டால்பின்கள் கடந்த 2 வருடத்தில் 10 க்கும் மேற்பட்ட முறை மீண்டும் தோன்றி உள்ளன. சமீபத்தில் ஈச்சம்பாக்கம் கடற்கரையில் டால்பின்கள் தோன்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு நீலாங்கரையில் தோன்றிய டால்பின்களை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்பக்கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
கடல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அங்கு டால்பின்கள் தோன்றி உள்ளன. அதிக கப்பல் போக்குவரத்து, படகு போக்குவரத்து இருக்கும் இடங்களில் டால்பின்களை பார்ப்பது கடினம். அதேபோல் அதிக வெப்பம் உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்களை பார்ப்பது அரிது. சென்னையில் அவ்வப்போது டால்பின்கள் அரிதாக தோன்றுவது வழக்கம். இதற்கு முன் 2021ல் ஒரு முறை சென்னையில் பல்வேறு பீச்களில் டால்பின்கள் தோன்றின.
அதிர்ச்சி சம்பவம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் இன்று மாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் ராட்சத டால்பின் இறந்த நிலையில் கடற்பரப்பில் மிதந்து கரை ஒதுங்கியது.
சென்னையில் கரை ஒதுங்கிய 15 அடி நீள டால்பின் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் ராட்சத டால்பின் இறந்த நிலையில் கடற்பரப்பில் மிதந்து கரை ஒதுங்கியது. இதை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். அங்கிருந்து வனத்துறை அதிகாரிகள் டால்பினை எடுத்து செல்ல உள்ளனர்
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications