முன்ஜாமீன் வாங்கலாம்? அடுத்த பிளான் என்ன? விஜய் வீட்டிற்கு விரைந்த.. வழக்கறிஞர்கள் டீம்! பின்னணி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு லாயர்கள் அடங்கிய டீம் ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் வழக்கு பதிவு
இந்த கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. TNPPDL சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதன்மையான நபர்களாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (A1), புஸ்ஸி ஆனந்த் (A2), நிர்மல் குமார் (A3) மற்றும் மற்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத்தை தடுக்கும் சட்டம் (TNPPDL Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
BNS பிரிவு 105 - கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை
BNS பிரிவு 110 - குற்றமற்ற கொலை செய்ய முயற்சி
BNS பிரிவு 125(b) - மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர அல்லது அலட்சிய செயல்கள்
BNS பிரிவு 223 - பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை
TNPPDL Act பிரிவு 3 - பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
இதனிடையே, சம்பவம் தொடர்பான உயர் அதிகாரிகள் விசாரணை போலீசால் மேற்கொள்ளப்படுகிறது.
லாயர் டீம் வருகை
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக, காவல்துறை அதிகாரிகள் விஜய்யின் சென்னை இல்லத்திற்கே நேரடியாகச் சென்று கேள்விகளை எழுப்பலாமா என்பது குறித்து தற்போது தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இது தொடர்பான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு லாயர்கள் அடங்கிய டீம் ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக சார்பாக இதில் தனி விசாரணை கேட்டு வழக்கு தொடுக்கலாம்.. அதாவது சிபிஐ, முன்னாள் நீதிபதி விசாரணை கேட்டு வழக்கு தொடுக்கலாம், விஜய்க்கு மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் வாங்கலாமா? என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய தவெக வழக்கறிஞர்கள் டீம் முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications