இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிப்பு? ”பீஸ்ட்”க்கு கிளம்பிய சிக்கல்! தடை செய்ய தமிழக முஸ்லீம் லீக் கடிதம்
சென்னை : பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாகவும், அதனால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் முதன்முறையாக இணையும் திரைப்படம் இந்த மாதம் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பீஸ்ட் படம்
படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளைப் படைத்து தற்போதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ள நிலையில் படத்தில் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. போர் விமானங்களை நடிகர் விஜய் இயக்குவது போலவும் தீவிரவாத கும்பல்களை அழிப்பது போலவும் இந்த படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி குவைத் அரசு தடை விதித்தது சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

ட்ரைலர் சர்ச்சை
இந்நிலையில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், பீஸ்ட் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இஸ்லாமியர்கள் சித்தரிப்பு
வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டு, இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர்.

துப்பாக்கி கலாச்சாரம்
தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்கள் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைபடங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. 2015 பெருவெள்ளத்தின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது.

இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி
கரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள் இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.

தடை விதிக்க வேண்டும்
இந்தச் சூழலில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்" என அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications