தெற்கு குலுங்க போகுது.. தலைவரே இப்படி பண்ணா எப்படிங்க? புரட்சி பண்ணும் மூத்த "தலை".. அதிரும் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் இன்னும் சில வாரங்களில் தமிழ்நாட்டு ஊடகங்களில் மிகப்பெரிய டாப்பிக்காக மாற போகிறார் என்று செய்திகள் வருகின்றன.

புயலுக்கு முன்னே அமைதி என்பார்கள். அப்படித்தான் வீச போகும் பெரிய புயலுக்கு முன்பே அந்த மூத்த அரசியல் தலைவர் பெருத்த அமைதியுடன் இருக்கிறாராம். ஆம் தனக்கு எதிராக கட்சியின் தலைவரே செய்லபடுவதை அறிந்து கொண்ட அவர் கட்சி தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

A major politician may jump from one party to another party after the Lok Sabha election Results

லோக்சபா தேர்தலுக்கு பின் நிர்வாகிகளிடம் பேசிய அந்த தென் மாவட்ட தலைவர்.. நம்ம கட்சி ஜெயிக்கணும்னுதானே தலைவர் நினைக்கணும். ஆனால் அவரே கட்சிக்கு எதிரா வேலை பார்த்து இருக்கிறார். அதுவும் எனக்கு எதிரா ரொம்ப திறமையா காய் நகர்த்தி இருக்கிறார்.

என்னையே அப்படியே மாட்டி விட பொல்லாத பிளான் எல்லாம் போட்டு இருக்கிறார். ஒரு தலைவர் இப்படி எல்லாமே இருக்குறது சரியா சொல்லுங்க. இப்படிப்பட்ட தலைவருக்கு கீழே நாம ஏன் இருக்கனும் என்று கோபமாக பேசி இருக்கிறாராம்.

2 பிளான்: லோக்சபா தேர்தலில் முதலில் தான் வெற்றிபெறும் வாய்ப்புடன் இருந்ததாகவும், தலைவர் பார்த்த உள்ளடி வேலைகள் காரணமாக இப்படி தோல்வியை நோக்கி சென்றுவிட்டதாகவும் அந்த தலைவர் கூறி இருக்கிறாராம். அதோடு இல்லாமல் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு வாக்குப்பதிவு: மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் 69.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு: இந்த லோக்சபா தேர்தல் முடிவு வந்ததும் அந்த புள்ளி தன்னுடைய பழைய கட்சிக்கே செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம். அப்படி இல்லையென்றால்.. வேறு எதிர் கட்சி ஒன்றிற்கு செல்லும் எண்ணமும் இருக்கிறதாம். இதே கட்சியில் நீடித்தால் எல்லாம் பிரச்சனை ஆகும்.. இப்படிப்பட்ட தலைவருக்கு கீழ் எல்லாம் இருக்க முடியாது.

அதனால் தேர்தல் ரிசல்ட் வரட்டும்.. அதன்பின் மொத்தமாக கட்சி மாறிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். அவரின் முடிவு கண்டிப்பாக தென் மாவட்ட அரசியலில் புயலை கிளப்பும் என்கிறார்கள் நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+