ஆக்சிஸ் ட்ரேடிங் போர்ட்டலில் மிகப் பெரிய ஓட்டை! வாடிக்கையாளர்க்களுக்கு பேராபத்து! வெளிவந்த ஆதாரம்!
சென்னை: இந்திய அளவில் மிகப் பிரபலமான ஆக்சிஸ் வங்கியின் ட்ரேடிங் போர்டலில் ஒரு மிகப் பெரிய தொழில்நுட்ப கோளாறை ஒன் இந்தியாவின் வர்த்தக இணையதளமான “குட் ரிட்டர்ன்ஸ்” வெளிப்படுத்தியுள்ளது. பெயரை வெளிப்படுத்த விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர், அந்த போர்ட்டலில் பிற வாடிக்கையாளர்களின் தரவுகளை அணுக முடிவதாகவும், பிறரின் கணக்கில் இருந்து வர்த்தகம் செய்ய முடிவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி வங்கி அல்லாத பிற சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது புரோக்கரேஜ், டீமேட், டிரேடிங் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக வங்கியின் டிரேடிங் போர்டலில் மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு இருப்பதும் அதன் காரணமாக பிற வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடு போக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழின் வர்த்தக செய்தி தளமான குட் ரிட்ட்ர்ன்ஸுக்கு பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் மூலம் ஆக்ஸிஸ் வங்கியின் வர்த்தக போர்ட்டலில் பிற வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் பிற பயனர்கள் சார்பாக வர்த்தக முன் பதிவு செய்ய முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே இந்த பிரச்சனை இருப்பதாகவும். பங்குச்சந்தை மூடப்பட்டிருக்கும் நேரத்திலும் பிறரின் விவரங்களை பார்க்க முடிந்ததாகவும், வர்த்தகங்களை புக் செய்ய முடிந்ததாகவும் கூறியிருக்கிறார்.
சந்தை நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக ஆக்சிஸ் வங்கி, செபி மற்றும் ஆர்பிஐக்கு புகார் தெரிவித்த போதும், அதனை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் நம்மிடம் பேசிய அந்த பயனர். மேலும், சமீபத்தில் ஆக்சிஸ் பேங்க் ரிங் டிரேடிங் பிளாட்ஃபார்மில் ஒரு தீவிரமான பிரச்சினை இருப்பதை கண்டறிந்தேன். மற்ற ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களின் முதலீட்டு விவரங்களை பார்க்கவும், அவர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யவும் இந்த தளம் என்னை அனுமதித்தது. இது ஒரு பெரிய பிரச்சினை எனவும் அவர் கூறினார்.
தனியுரிமை மீறல்: டிரேடிங் தளங்களில் பிற வாடிக்கையாளர்களின் முதலீட்டு விவரங்களை அங்கீகரிக்கப்படாத பிறர் பார்க்கும் வகையில் இருப்பது அவர்களின் தனியுரிமை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
பாதுகாப்பு மீறல்: மற்றொரு வாடிக்கையாளரின் கணக்கில் அவர்களின் அனுமதியின்றி பரிவர்த்தனை செய்ய முடிவதும் அல்லது அதற்கு அனுமதிப்பதும் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் நிதி மோசடி செய்ய வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரவு மீறல்: அங்கீகாரம் இல்லாமல் பிற வாடிக்கையாளர்களிடன் முக்கியமான நிதித் தகவலை பிறர் அணுகும் படி இருப்பதும் அப்பட்டமான தரவு மீறலாகும். இது அடையாள திருட்டு மற்றும் நிதி இழப்பு போன்ற அபாயங்களுக்கு வாடிக்கையாளர்களை இட்டுச் செல்லும்.
ஒழுங்குமுறை மீறல்: தரவு பாதுகாப்பு மீறல் மற்றும் பாதுகாப்பு மீறல் போன்றவற்றோடு, தங்களின் வாடிக்கையாளர்களின் தரவைப் பாதுகாக்கவும், நிதி விதிமுறைகளை மீறுவதும், வங்கிக்களுக்கு கடுமையான சட்ட சிக்கலை ஏற்படுத்தும்.
நெறிமுறை மீறல்: வங்கி மற்றும் வர்த்தகத்தின் நம்பிக்கை தான் அடிப்படை. இந்நிலையில் இது போன்ற மீறல்கள் வங்கியின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதோடு, வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் சிதைத்து விடும்.
இந்த குறைபாடு தொடர்பாக பேசிய அந்த வாடிக்கையாளர்,” எனது ஒப்புதல் இல்லாமல் எனது கணக்கின் மூலம் யார் வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. எனது கணக்கில் செய்யப்படும் எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைக்கும் நான் எப்படி பொறுப்பாக முடியும். அதே நேரத்தில் எனக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு ஆக்சிஸ் வங்கி தான் இழப்பீடு தர வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்த விவகாரத்தால் மன அழுத்தம் மற்றும் நிறைய பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன்.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் தரவை பாதுகாக்கவும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறவும் ஆக்சிஸ் வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கியின் வர்த்தக போற்றலில் நிலவும் குறைபாடுகளை நிரூபிப்பதற்காக நான் இரண்டு விற்பனை ஆர்டர் கொடுத்த ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்துள்ளேன்.”’ என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications