ஆசைவார்த்தை காட்டி 15 சிறுமியை சீரழித்த புளியந்தோப்பு அலெக்ஸ்... போக்சாவில் உள்ளே தள்ளியது போலீஸ்
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காடசி பாலியல் பலத்காரம் செய்த நபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி மீனா (பெயர் மாற்றப்பட்டள்ளது). மீனாவை கடந்த 14 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது தந்தை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் மீனாவை நேற்று புழல் காவாங்கரை பகுதியில் மீட்டனர்.
விசாரணையில் சிறுமி மீனாவை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 22) என்ற நபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். அத்துடன் நம்பி வந்த மீனாவை திருமண ஆசை காட்டி தினமும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அலெக்சை கைது செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications