வடிவேலு பாணியில் அரிசி கடையில் 'சாம்பிள்'.. ஏமாந்த பெண்மணி.. போலீசிடம் ஓடிய கணவர்
சென்னை: சென்னை கொடுங்கையூரில் வடிவேல் பட பாணியில் அரிசி வாங்குவதாக கூறி பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
வடிவேலு ஒரு படத்தில் அரிசி கடை வைத்து நடத்துவார். கையோடு திருட்டு வேலைகளையும் செய்வார். அந்த படத்தில் ஒரு காட்சியில் சாக்குடன் ஒரு அரிசி கடைக்கு சென்று, ஒவ்வொரு அரிசியாக சாம்பிள் பார்ப்பார். சாம்பிள் பார்ப்பது போல் பல கிலோ அரிசிகளை கையிலேயே அள்ளிக்கொள்வார்.
கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு, தராசு மற்றும் படிக்கல்லுகளையும் ஆட்டையை போட்டு கனநிமிடத்தில் அவரை ஏமாற்றிவிட்டு அதை விற்றுவிடுவார்.

ஏமாற்றம்
இந்த காட்சியை பார்த்து விட்டு ஒருவர் அதே பாணியில் சாம்பிள் பார்த்து ஒரு அரிசிக்கடைக்காரை ஏமாற்றி விபூதி அடித்திருக்கிறார். பாவம் கடைக்காரர் கதறிக்கொண்டிருக்கிறார். போலீசில் போய் புகார் அளித்திருக்கிறார். அந்த மர்ம ஆசாமி யார் என்பதை இதுவரை தெரியவில்லை.

அரிசி மண்டி
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் கண்ணையா. இவரது அரிசி கடையில் தான் மர்ம ஆசாமி சாம்பிள் பார்த்திருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உ ணர்ந்த அவர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அரிசி சாம்பிள்
அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளதாவது நேற்று மாலை தனது மனைவி பூஜிதா கடையில் இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அரிசி வாங்குவதாக கூறி பல்வேறு வகையான அரிசிகளைப் சாம்பிள் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

30 ஆயிரம் திருட்டு
அப்போது என் மனைவியை திசை திருப்பி 30ஆயிரம் பணத்தை கல்லாவில் இருந்து பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வடிவேல் பட பாணியில் அரிசி சாம்பிள் பார்ப்பதாக பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். டெக்னிக்கலாக ஏமாற்றி கல்லாபெட்டியில் பணத்தைதிருடிய அந்த நபரின் செயல் சென்னையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications