சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஒரே பரபரப்பு..அரை நிர்வாண கோலத்தில் கத்தியுடன் கலாட்டா செய்த நபர்
சென்னை : சென்னை கிண்டி ரயில்வே மேம்பாலத்தில், அரை நிர்வாணமாக, கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு, வாகன ஒட்டிகளை மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும் கிண்டியில், அங்கு உள்ள ரயில்வே மேம்பாலத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர், அரை நிர்வாணத்துடன் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால், தன்னைத்தானே உடம்பில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். பின்னர், கத்தியை கையில் சுழற்றியபடியே, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தினார். இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், அச்சமடைந்து வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, நாலாபுறமும் சிதறி ஓடினர்.

வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால், பரபரப்பாக காட்சியளிக்கும் கிண்டி பகுதியில் திடீரென போக்குவரது நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும், அந்த நபர் அங்கிருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓட முயன்றார்.
எனினும், போலீசார் அவரை நிற்க வேண்டும் என்று குரல் கொடுத்தவாறு பின்தொடர்ந்தனர். எனினும் அந்த நபர் அதனையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ரத்தம் சொட்ட சொட்ட சென்ற அந்த நபரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியும் அங்கிருந்து தப்பிச் செல்வதிலேயே அவர் குறியாக இருந்தார்.
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த போலீசார், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், ரத்தக்காயங்களுடன் இருந்த அவரை, உடனடியாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, முதலதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியபோது, கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இதனையடுத்து, அவரின் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கிண்டியில், வாகன ஓட்டிகளை கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, தன்னைத்தானே தாக்கி கொண்டு, ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் சென்ற நபரால், அப்பகுதியில் சிறிதும் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications