முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழக அரசு பள்ளிகளில் நடந்த அற்புதம்.. மாநில திட்டக்குழு தகவல்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 95 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது மற்றும் பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளை மாநில திட்டக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
மேலும் பழங்குடி சமுதாயத்தினரின் நிலை, பல்கலைக்கழகங்களின் வினாத்தாள்கள் தரம், காலநிலை மாற்றம், வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களால் மக்கள் பெற்ற நன்மைகள் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நேற்று வழங்கினார்.
அந்த அறிக்கையில் காலை உணவுத் திட்டத்தினால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம், பயனாளி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கல்வி மற்றும் உடல் செயல்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. இதேபோல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் காரணமாக, மக்களைத் தேடி மருந்துகள் செல்வதால் அவசர சிகிச்சைக்கென்று மருத்துவமனைகளை நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது,
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் தேவையையும், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் முன்னுரிமைகளுக்கேற்ப திட்டத்தை செயல்படுத்தும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு விஷயங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுக்கு பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து நாங்கள் கடந்த 5 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டோம். அதுபற்றிய 11 அறிக்கைகளை முதல்வரிம் வழங்கி உள்ளோம். அரசு பள்ளிகளில் முன்பு 60 அல்லது 70 சதவீதம் என்றிருந்த மாணவர் வருகைப்பதிவு, முதல்வரின் காலை உணவு திட்டத்தால் சாதாரணமாக 90 முதல் 95 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது.
பள்ளிக் குழந்தைகள் இப்போது எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம்பிடிப்பதில்லை. குழந்தைகள் காலை உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். மாணவர்கள் பள்ளிகளில் இட்லி, தோசை கேட்கிறார்கள். முந்தைய நாளில் இருந்தே தயாரிக்க வேண்டும் என்பதால் அவற்றைக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆனால் அந்த திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
வாழ்வாதாரம் நிமித்தமாக பெற்றோருடன் அந்த குழந்தைகள் வேறிடத்திற்கு புலம் பெயர்ந்து போய் விடுவதன் காரணமாகவே அரசு பள்ளிகளில் 100 சதவீத வருகைப் பதிவில் 10 சதவீதம் குறைந்துள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நகராட்சிகளில் விரிவுபடுத்தி உள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கிராம மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளித்துள்ளன. திடீரென்று நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றார்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications