சென்னை பீச்களில் நீடிக்கும் மர்ம நுரை படலம்.. மக்கள் தொடர்ந்து அச்சம்.. இப்போதைக்கு போகாதாம்!
சென்னையில் பல பீச்களில் தொடர்ந்து மர்ம நுரை படலம் கரை ஒதுங்கி வருகிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் பல பீச்களில் தொடர்ந்து மர்ம நுரை படலம் கரை ஒதுங்கி வருகிறது. மக்களை இது பெரிய அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கடல் பகுதி வண்ண நிறமாக மாறியது. இது இந்தியா முழுக்க பெரிய வைரல் செய்தியானது. ஆனால் இது நல்ல விஷயம் கிடையாது. தவறானது என்று வல்லுனர்கள் கூறினார்கள்.
இதனால் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர் .அப்போது கடலில் ஏற்பட்ட மாசு தன்மைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

எப்படி
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பட்டினபாக்கம் அடுத்துள்ள சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், இராயப்பேட்டை அருகே இருக்கும் மற்ற கடல் பகுதியிலும் இன்று அதிக அளவில் நுரை கரை ஒதுங்கியது. மொத்தமாக கரையை மூடும் அளவிற்கு நுரை கரை ஒதுங்கியது. மெரினாவில் சில இடங்களில் நுரை ஒதுங்கியது.

மாசுதான்
கடலில் உருவாகி உள்ள மாசுதான் இதற்கு காரணம். சென்னையில் உள்ள அடையார் ரசாயன ஆலைகள் காரணமாக இந்த நுரை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் கடல் நீரின் நச்சுத்தன்மை அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.

மக்கள் அச்சம்
இதனால் மீன்கள் அதிக அளவில் பலியாக வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள், அங்கு இருக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்த நுரை இப்படிதான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மழை இருக்கும்
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை முடியும் வரையில் இந்த நுரை காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக இந்த கழிவு நீர் கடலில் கலந்ததும், ஆழத்திற்கு சென்றுவிடும். ஆனால் மழை காரணமாக கடலில் தற்போது அதிக தண்ணீர் சேர்கிறது.

சிக்கல் தொடரும்
இதனால் ஆகவே கழிவு கடலுக்குள் செல்லாமல், வெளியே வந்து நுரையாக மாறி கரைக்கு வருகிறது. இதனால் அந்த கடல் நீர் அருகே மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications