பெரியார்- மணியம்மை திருமணம்.. சிண்டு முடிக்கப்படும் துரைமுருகன் வேலூர் பேச்சு- வெடிக்கும் சர்ச்சை!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தந்தை பெரியார்- மணியம்மை திருமணம் தொடர்பாக பேசிய பேச்சு சிண்டு முடியப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டு வருவதாக திராவிடர் கழகத்தினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்டம் வேலூர். இந்த முப்பெரும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் குறித்து உணர்வுப்பூர்வமாக சிலாகித்து பேசியிருந்தார்.

சிண்டு முடியப்படும் துரைமுருகன் பேச்சு: அமைச்சர் துரைமுருகன் இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசும் போது, பெரியார் - மணியம்மை திருமணம்தான் திமுக உருவாக காரணம்; மணியம்மையை வேலூரில் இருந்துதான் பெரியார் 'கூட்டிகிட்டு' போனார் என இயல்பாகவே பேசினார் அமைச்சர் துரைமுருகன். ஆனால் விஷமிகள் சிலர், பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் துரைமுருகன் பேசிவிட்டதாக சமூக வலைதளப் பக்கங்களில் சிண்டு முடிகின்றனர் என்கின்றனர் திராவிடர் கழகத்தினர்.
துரைமுருகன் பேசியது என்ன? :வேலூர் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சு இதுதான்: கழகம் (திமுக) பிறந்ததற்கு நாங்கள்தான் (வேலூர்) காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் கழகம் பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது. திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூருக்கு) வந்தார். மணியம்மையை பார்த்தார்.. கூட்டிகிட்டுப் போய்ட்டார்.. அவர் தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறந்த அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை விட்டார். கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது. ஆக, வேலூரில் இருக்கிற மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது. ஆக, திமுக வந்ததற்கே எங்க மாவட்டம்தான் காரணம் (கூட்டம் ஆப்பரிக்கிறது.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் புன்னகை) என தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இதுதான் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேசியது.
இயல்பான பேச்சு: ஆனால் அமைச்சர் துரைமுருகன் பெரியார் மணியம்மையை "கூட்டிகிட்டுப் போனார்' என சொன்ன ஒற்றை வார்த்தை திராவிடர் கழகத்தையும் திமுக தலைமையையும் புண்படுத்திவிட்டதாக சிலர் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். வரலாறு என்னவோ அதை தமக்கே உரித்தான பாணியில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்; இதில் வருத்தப்பட எதுவும் இல்லை என்கிறது திராவிடர் கழகத் தரப்பு.
-
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications