சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தளர்வுகளுடன் ஊரடங்கு.. வெளியூர் போக போறீங்களா.. தமிழ்நாடு அரசின் இ-பதிவு தளத்தில் புதிய வசதி!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை முதல் ஜூன் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் இ-பதிவு பெற்று கார், ஆட்டோவில் பயணிக்க தமிழ்நாடு அரசின் இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது,

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜுன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். அவர் தனது அறிவிப்பில் கடந்த வார ஊரடங்கை போல் இல்லாமல் இந்த முறை பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.

ரூ.250 கோடிக்கு பல்நோக்கு மருத்துவமனை.. மதுரை நூலகம்.. 6 முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு ரூ.250 கோடிக்கு பல்நோக்கு மருத்துவமனை.. மதுரை நூலகம்.. 6 முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சேவைகளுககு

கடைகளுக்கு அனுமதி

கடைகளுக்கு அனுமதி

மேற்கண்ட 11 மாவட்டங்களை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மளிகை கடைகளை திறக்கலாம், காய்கறி கடைகளை திறக்கலாம், தீப்பட்டி தொழிற்சாலைகளை குறைந்த பணியாளர்களுடன் திறக்கலாம். வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், -மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாம் என்ற அரசு அறிவித்துள்ளது.

பிளம்பர் எலக்ட்ரீசன்

பிளம்பர் எலக்ட்ரீசன்

இதேபோல் பிளம்பர், எலக்ட்ரீசன், தச்சர், வீடு பாரமரிப்பு பணியாளர்கள், வாகன பழுது நீக்குபவர். கம்ப்யூட்டர் மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்காததால், வெளியூர் செல்வோர், உரிய காரணங்களுக்காக மட்டு இ-பதிவு செய்து வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது,.

புதிய வசதி

புதிய வசதி

அதாவது வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்ப்படுவார்கள். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க நாளை முதல் அனுமதிக்கப்படும். இதற்கான வசதி https://eregister.tnega.org/#/user/pass என்ற அரசின் இ பதிவு இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணங்கள் அனுமதி

பயணங்கள் அனுமதி

அதாவது ஆட்டோ, இருசக்கர வாகனம் பேருந்து, கார், வாடகை கார், இன்னோவா, எஸ்யூவி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அதை பதிவு செய்து செல்ல முடியும். மருத்துவ அவசரம், இறப்பு காரியம், இறப்பு, தன்னார்வலர்கள், முதியோர் மற்றும் பராமரிப்பாளர்கள், குழந்தைகள் , முதியோர், விதவைகள், பெண்கள் நல நல விடுதிகளுக்கான பயணங்கள் போன்றவை அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் தமிழநாட்டை விட்டு சாலை வழியாக வெளியே செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

English summary
A curfew with relaxations has been declared from tomorrow till June 14. A new facility has been added to the e-Registration website of the Government of Tamil Nadu to get e-registration and travel by car or auto in this curriculum
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X