'ஷிண்டே'க்கள் 'வேல்' ஏந்தும் காலம்.. கனவுகள் 'வான்' தொடும் நீளம்.. வரலாறுகளுக்குதானே விடை தெரியும்!
சென்னை: மகாராஷ்டிரா அரசியலில் யாரோ ஒருவர் உருவாக்கிய கட்சியில் இணைந்து அதே கட்சியை கபளீகரமே செய்து கட்சி ஓனரையே கதறவிட்டவர் ஏக்நாத் ஷிண்டே. அதனால்தான் என்னவே மாமனார் உருவாக்கிய கட்சியை ஆட்டைய போட்ட 'சந்திரபாபு'க்கள் மறக்கடிக்கப்பட்டு 'ஏக்நாத் ஷிண்டே'க்கள் பெயர் அதீதமாக இந்திய அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுகின்றன.
தமிழ்நாடுதான் என்றில்லை... அதிமுகதான் என்றில்லை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஷிண்டேவை 'டெல்லி' சர்க்கார் "உற்பத்தி" செய்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் என்றில்லை.. மாநில கட்சிகள்தான் என்றில்லை.. மிசோரம் போன்ற குட்டி மாநிலங்களிலும் கூட எல்லை அருணாச்சல பிரதேசத்திலும் கூட ஷிண்டேக்கள் "உற்பத்தி" டெல்லியால் புற்றீசல் போல புறப்பாடு ஆகி கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிமுகவை மையமாக வைத்து ஒரு ஷிண்டே அல்ல... இரு ஷிண்டேக்கள் வலம் வருவதை எல்லோரும் பேசுகிறார்கள்.. எல்லோரும் பேசுவதையே நாமும் பேசி வருகிறோம். ஷிண்டேக்களை பக்கத்தில் வைத்து கொண்டுதான் 'கட்சிகளின் தலைவர்கள்' தங்களது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர்.. வீட்டுக்குள்ளே வெட்டு குத்து விளையாட்டு மாதிரி!
தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் ஒரு ஷிண்டே இருக்கிறார்தானே.. அதையேதான் " அண்ணாமலைக்கு 'ஆப்பு'- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?" என நாமும் எழுதி இருந்தோம்.
இதில் என்ன புது அப்டேட் என்கிறீர்களா? இந்த ஷிண்டேக்கள் கூட்டணி நினைத்தது போல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி பறிபோகவில்லை. இப்போதைக்கு பறிபோவதற்கான கூறும் தெரியவில்லை. இதனால் "எதிர்கால" திட்டத்தில் ரொம்பவே பிஸியாகிக் கொண்டிருக்கின்றனராம். 2024-ல் மீண்டும் டெல்லியில் இதே காட்சிகள் நீடித்தால் நாம் எப்படி "இருக்க" வேண்டும் என்பதுதான் புதிய மந்திரலோசனையின் மையம்.
"நாம நினைப்பது போல நாலு கூறாக இந்த "மா" நிலம் பிளவுபடாமலா போகும்? நமக்கும் ஒரு நாள் நாற்காலி வராமலா போகும்? சுழற்சி முறையில் மூவருமாய் மகுடம் சூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன முறை பிடியில் இருந்தவர்கள் 2026-ல் பின்வருவார்களா? புதிய முகங்களை வளைக்க முடியுமா? "முதலீடு" என்ன? "வருவாய்" என்ன? என்பதில்தான் ஷிண்டேக்கள் மூச்சுக்கு மூச்சு விவாதிக்கிறார்களாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications