வாரே வா.. இனி சாதாரண டிக்கெட்டிலும் 'ஸ்லீப்பர்' பெட்டிகளில் பயணிக்கலாம்.. ரயில்வேயின் அசத்தல் முடிவு
சென்னை: கொரோனா காலத்தில் ரயில் போக்குவரத்தில் பயணிகளுக்கு புதிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் சில மாற்றங்களை குறிப்பாக சாதாரண டிக்கெட்டில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வது குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.
இப்பயணத்தை எளிதாக்குவதற்காக ரயில்வே நிர்வாகம் தினம் தினம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை, ரயில் பெட்டியின் உட்புறங்களில் மாற்றம், சிறப்பு ரயில்கள் என பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் ரயில் உட்பட அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

ரயில் பயணம்
பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் சாதாரண பெட்டிகளாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி சாதாரண வகுப்புக்கான டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகளை அனுமதிப்பது குறித்து யோசித்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், பயணிகள் பெரும்பாலும் ஏசி பெட்டிகளில்தான் முன்பதிவு செய்கின்றனர்.

முன்பதிவு செய்யப்படாத பெட்டி
அதேபோல வெயில் காலங்களிலும் ஏசி பெட்டியில்தான் முன்பதிவு செய்கின்றனர். இப்படி இருக்கையில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவுகள் குறைந்து வருகிறது. அதேபோல படுக்கை வசதி கொண்ட பெட்டியிலும் பயணிக்க போதுமான வசதி இல்லாதவர்கள் அதிக அளவில்
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் நெரிசலாக பயணிக்கின்றனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒன்றிரண்டுதான் இருக்கிறது. ஆனால் இதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. தமிழ்நாட்டில் இது குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி
இவ்வாறு பயணிக்கும் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகுப்பு பயணத்திற்கான டிக்கெட்டை கொண்டு பயணிக்க தொடங்கி விடுகிறார்கள். எனவே காலியாக உள்ள முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை கூட்ட நெரிசலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இந்த திட்டத்திற்காக படுக்கை வசதிகள் கொண்ட ரயில்களில் 80 சதவிகிதத்திற்கும் குறைவாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் ரயில் எத்தனை என்கிற விவரத்தை ரயில்வே நிர்வாகம் கேட்டிருக்கிறது.

எப்படி இருந்தாலும்
இந்த விவரங்கள் கைகளுக்கு கிடைத்த பின்னர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் அனுமதிக்கப்படலாம். ஆனால் பட்டுக்கை வசதி கொண்ட இந்த பெட்டிகளில் நடுப்பகுதியில் உள்ள சீட்டை உபயோக்க முடியாது. ஆக எப்படி இருந்தாலும் அவசரமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறும் சாமானியர்களுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் இடம் கிடைத்தாலும் அவர்களால் படுத்து பயணிக்க முடியாது. ஆனால் பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும். அதேபோல அனைவருக்கும் அமர்வதற்கு சீட் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications