கள்ளக்குறிச்சி வன்முறை- சட்டவிரோதமான கைதுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

ஆனால் இவ்வழக்கில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்; நடந்த சம்பவம் என்ன என்பது தெரியாமலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கமான பணிகளுக்கு சென்றவர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கிராம பொதுமக்கள் சென்னைக்கு வந்து டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாகவும் புகார் மனுவும் கொடுத்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யபப்ட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். மதுரை வழக்கறிஞர் ரத்தினத்தின் இம்மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications