வீட்டிற்கே வரும் டூப்ளிகேட் ஏடிஎம் கார்டு.. அடுத்த நொடி மொத்த பணமும் ஸ்வாகா.. எப்படி தப்பிப்பது?
சென்னை: வீட்டிற்கே டூப்ளிகேட் ஏடிஎம் கார்டு அனுப்பி, அதன் மூலம் புதிய ஓடிபி வாங்கி, உங்களை ஏமாற்றும் புதுவிதமான மோசடி தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. இந்த மோசடிகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
பணம் எப்போது டிஜிட்டலுக்கு வந்ததோ அப்போதே திருடர்களும் டிஜிட்டலில் நுழைந்து விட்டார்கள்.மக்களை ஏமாற்ற ஒவ்வொரு நாளும் புதுவிதமான முயற்சிகளை செய்து வருகிறார்கள் டிஜிட்டல் திருடர்கள். ஏடிஎம் ஒடிபி கேட்பதை கொஞ்ச நாட்கள் செய்தார்கள், கணிணியை ஹேக் செய்து அவர்களை மிரட்டி கொள்ளை அடிக்க செய்தார்கள். அடுத்ததாக மொபைல் தொழில் நுட்பம் வளர்ந்த பின்னர். ஆன்லைன் பாஸ்வேர்டுகளை பெற மொபைலை ஹேக் செய்து திருட தொடங்கினார்கள்.

பரிசு விழுந்ததாக மெசேஜ் அனுப்புவது, மறுபுறம் பின் நபரை கேட்பது, ஆதார் எண்ணை கேட்பது, டூப்ளிகேட் சிம் வாங்கி ஏமாற்றுவது என பல்வேறு வகையில் பணத்தை பறித்து வருகிறார்கள். கேஒய்சி கேட்டு ஏமாற்றினார்கள். இபியில் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி ஏமாற்றினார்கள். ஒவ்வொரு ஓட்டையாக டிஜிட்டல் திருடர்கள் உருவாக்கிக் கொண்டே வருகிறார்கள். அதில் சிலர் ஏமாந்த பிறகு அரசும் அதிகாரிகளும் அலார்ட் செய்வதும் நடக்கிறது.
அண்மையில் விளம்பரம் பார்த்தால் பணம் என்ற பெயரில் புதுவிதமான மோசடி நடந்து வருகிறது. விளம்பரம் பார்த்தால் பணம் என்ற பெயரில் 40 முதல் 50 ஆயிரம் வரை ஆரம்பத்தில் பணம் வாங்குவார்கள். பின்னர் இரண்டு மாதம் சிறிய அளவில் பணம் அனுப்பிவிட்டு அதன்பிறகு மோசடி செய்வார்கள். இந்த மோசடி இப்போது டிஜிட்டலில் ஏக பிரபலமாக தற்போது உள்ளது,
இது ஒருபுறம் எனில், வீட்டிற்கே டூப்ளிகேட் ஏடிஎம் கார்டு அனுப்பி, அதன் மூலம் புதிய ஓடிபி வாங்கி, உங்களை ஏமாற்றும் புதுவிதமான மோசடி தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது என்றால், உங்கள் வீட்டிற்கு வங்கியில் இருந்து அனுப்புவது போலவே புதிதாக ஏடிஎம் கார்டு அனுப்புவார்கள். இந்த ஏடிஎம் கார்டை நீங்கள் வாங்கி உடன், உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வரும். அவர் உங்கள் பெயர், உங்கள் முகவரி என எல்லாம்வற்றையும் வங்கி அதிகாரி போல் பக்காவாக பேசி உறுதி செய்வார்.
அதன்பின்னர் உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்தால் தான் புதிய ஏடிஎம் ஆக்டிவேட் ஆகும் என்று கூறுவார். அதையும் நம்பி அனுப்பினால் அவ்வளவு தான். அதேநேரம் ஒடிபி தராமல் சந்தேகப்பட்டால், உங்கள் ஏடிஎம் முடக்கப்படும் என்று அச்சுறுத்தவும் செய்வார். அதனை நம்பி, உங்கள் செல்போனுக்கு வரக்கூடிய ஓடிபியை கொடுத்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் அடுத்த நொடி காணாமல் போகும். உங்களுக்கு விபூதி அடித்துவிட்டு அடுத்தவரிடம் போய் இதே வேலையை செய்ய தொடங்குவார்கள். எனவே எந்த காரணம் கொண்டும் ஒடிபியை கொடுக்கவே கூடாது.












Click it and Unblock the Notifications