குட்நியூஸ்.. அடுத்த 100 ஆண்டுக்கு கவலை வேண்டாம்! காசநோய்க்கு வரும் புதிய தடுப்பூசி! 3ம் கட்ட சோதனை
சென்னை: உலகில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் எப்போதும் காசநோய் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், கூட ஆண்டுக்கு 16 லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்த நோய்க்கு பலியாகின்றனர். இந்நிலையில், இந்நோய்க்கு எதிராக தற்போது புதிய தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த தடுப்பூசி சுமார் 85 லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.2 லட்சம் மக்கள் இந்த காசநோயால் உயிரிழக்கின்றனர். தற்போது இந்த நோய்க்கு எதிராக BCG எனப்படும் காசநோய் தடுப்பூசிதான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது, இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மட்டுமே பலனளிக்கும். மற்றபடி பெரியவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்காது. மட்டுமல்லாது இந்த தடுப்பூசி சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகும்.

எனவே உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு மாற்றாக வேறு ஒரு தடுப்பூசியை தயாரிக்க ஆய்வாளர்கள் தொடர்ந்து முயன்று வந்தனர். தற்போது இந்த முயற்சி ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு தயாரித்த தடுப்பூசியை பரிசோதித்து பார்க்க உலகின் மிகப்பெரிய பணக்கார தொண்டு நிறுவனங்களான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் வெல்கம் ஆகியவை நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த பரிசோதனைக்காக மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சினிமாக்களில் வருவதை போல ஏதோ இரண்டொரு எலிகளுக்கு இந்த மருந்து கொடுத்து டெஸ்ட் செய்வதை போல் அல்ல இந்த செயல்பாடு. இப்போது தொடங்கினால் கூட இந்த மருந்தை பரிசோதனை செய்து முடிக்க 6 ஆண்டுகள் வரை ஆகும். அந்த அளவுக்கு இதற்காக உழைக்க வேண்டியுள்ளது. எனவேதான் இவ்வளவு பணம் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 73 சதவிகிதம் நிதியை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும், மீதமுள்ள 27 சதவிகித நிதியை வெல்கம் அறக்கட்டளையும் வழங்குகிறது.
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. எனவே இதற்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துக்கு M72/AS01E என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மற்ற நாடுகளை விட ஆப்பிரிக்கா நாடுகள்தான் அதிக அளவில் காசநோய் மரணத்தை சந்திக்கின்றன. இச்சூழலில் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால் காசநோய் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் என்று அந்நாட்டின் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் பொது ஈடுபாட்டின் தலைவர் நோமதம்சங்கா மஜோசி கூறியுள்ளார்.
இந்த நோயானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மறைநிலையில் பாதிப்பு இருத்தல் (Latent TB). அதாவது இவருக்கு பாதிப்பு இருக்கும் ஆனாலும் வெளியில் தெரியாது. இவரால் தொற்று பரவாது. இரண்டாவது வகை நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெளிவாக தெரியும். இவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒரு ஆண்டில் சுமார் 10-12 பேருக்கு இந்த நோயை பரப்பிவிடுவார்கள்.
இந்த முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு நோய் பரிணாமம் அடைவதைத்தான் இந்த M72 தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது. தற்போது இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அடுத்த ஆண்டு தொடக்கப்பட இருக்கிறது. எப்படியாயினும் இந்த பரிசோதனைகள் முடிவடைய 6 ஆண்டுகள் வரை ஆகலாம். பரிசோதனை முடிவுகள் அவ்வப்போது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வெளியிடும்.
எதிர்பார்த்தபடி இந்த பரிசோதனை வெற்றியடைந்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த தடுப்பூசி, காசநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 85 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றும். அதேபோல 7.6 கோடி பேரை காசநோயிலிருந்து இது காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications