சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலிசபெத்தும் நீதான்.. சுனிதாவும் நீதானா.. பெண் குரல் பேச்சு.. 40 லட்சத்தை இழந்த சென்னை பிசினஸ்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் (48) என்ற தொழிலதிபரிடம் பேஸ்புக் மெசஞ்சரில் பெண் குரலில் பேசி ரூ.40 லட்சத்தை அபகரித்த நைஜீரிய வாலிபரை மும்பையில் போலீசார் கைது: பலரிடம் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

சென்னை:கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப் (48). இவர், ராயல் டிரேடிங் என்ற பெயரில் மருந்து பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பேஸ்புக் பக்கத்தில் தனது தொழில் தொடர்பான தகவல்களை பதிவு செய்து வந்திருக்கிறார். அந்த பதிவுகளை பார்த்த லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண், மெசஞ்சர் மூலம் ஜோசப்பை தொடர்பு கொண்டு, லண்டனில் மருந்து பொருட்கள் விற்பனை நிலையம் வைத்துள்ளதாக அறிமுகமாகிறார்.

பின்னர் அவர், ''மும்பையில் ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் 'போலிக் ஆயில்' கிடைக்கிறது. ரூ.40 லட்சம் மதிப்புள்ள அந்த ஆயிலை வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் வாங்கி எனக்கு அனுப்பினால், ரூ.2 லட்சம் கமிஷனுடன் சேர்த்து ரூ.42 லட்சமாக தருவதாக கூறியிருக்கிறார்.

வெள்ளைத்தாளில் கண்ணீர் துளிகள் தெறிக்க விரல் நடுங்க தொ.ப.வுக்கு இரங்கல் எழுதுகிறேன்.. கமல்ஹாசன்வெள்ளைத்தாளில் கண்ணீர் துளிகள் தெறிக்க விரல் நடுங்க தொ.ப.வுக்கு இரங்கல் எழுதுகிறேன்.. கமல்ஹாசன்

ஆயில் கிடைக்கும்

ஆயில் கிடைக்கும்

வாரத்திற்கு ரூ.2 லட்சம் கமிஷன் கிடைக்கிறதே என்ற ஆசையில் ஜோசப் ஒவ்வொரு வாரமும் அந்த ஆயிலை வாங்கி அனுப்புகிறேன் என்று எலிசபெத்திடம் உறுதியளித்து, ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். பிறகு, மும்பையில் உள்ள சுனிதா என்ற பெண்ணை தொடர்புகொண்டால், உடனடியாக போலிக் ஆயில் கிடைக்கும். அதை வாங்கி எனக்கு அனுப்ப வேண்டும் என்று எலிசபெத் தெரிவித்துள்ளர்.

தகவல் இல்லை

தகவல் இல்லை

இதை நம்பி , ஜோசப் மெசஞ்சர் மூலம் மும்பையில் உள்ள சுனிதாவிடம் பேசியிருக்கிறார். அப்போது, சுனிதா தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தினால் உங்களுக்கு ‘போலிக் ஆயில்' உடனடியாக அனுப்புவேன், என கூறியிருக்கிறார். அதன்படி ஜோசப், சுனிதாவின் வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஆயில் வந்து சேரவில்லை. இதையடுத்து, சுனிதாவை தொடர்புகொண்டபோது, எந்த தகவலும் இல்லை. இதனால், லண்டனில் உள்ள எலிசபெத்தை தொடர்புகொண்ட போது அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் தன்னை இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள் என்பதை உணர்ந்தார்.

நைஜீரிய இளைஞர்

நைஜீரிய இளைஞர்

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோசப் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஜோசப் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்கள். மும்பையில் இருந்து பேசிய நபர், மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் நைஜீரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் என்பவரை கைது செய்தார்கள்

கைது

கைது

. இவர், இவர்தான் லன்டன் எலிசபெத் மற்றும் சுனிதா போல் பெண் குரலில் பேசி, தொழிலதிபரிடம் ₹40 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுபோல் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. சென்னையில் மட்டும் 4 பேரிடம் பல லட்சம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நைஜீரிய இளைஞர் கிறிஸ்டோபர் வில்மரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

English summary
A Nigerian youth has been arrested in Mumbai for allegedly embezzling Rs 40 lakh from a business man Joseph, 48, from Chennai. His deception of many has been exposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X