20 தோசை சாப்பிடுவேன்.. நீயா நானாவில் டிரெண்டான இளைஞரை நினைவிருக்கா? ரயிலில் அடிபட்டு பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரோம்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களால் தாக்கப்பட்டு பலியாகினர். இதில் ஒருவர் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் கூறுகையில், புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது பி.சதீஷ் (40), ஆர்.பிரணவ் (22) ஆகியோர் மீது தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சதீஷ் மற்றும் ராயபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரணவ் என்பவர் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது மொபைல் போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

A person who got trending through Neeya Naana show met with an train accident in Chennai

எதையும் கவனிக்காமல் இவர்கள் மொபைல் பேசிக் கொண்டிருந்ததால் ரயில் ஹாரன் சத்தம் கேட்கவில்லை. இருவரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதில் பிரணவ் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீயா நானா நிகழ்ச்சியில் 2 வாரம் முன் என் பையன் 20 தோசை சாப்பிடுவான். நானும் சளிக்காமல் ஊத்தி குடுப்பேன். அதை விட என்ன வேலைன்னு இந்த இளைஞரின் அம்மா பேசிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டானது. 20 தோசை வரை டிசைன் டிசைனாக சாப்பிடுவேன் என்று அந்த இளைஞரும் பேசி இருந்தார்.

அந்த இளைஞரின் சகோதரி இதை கிண்டலாக விமர்சனம் செய்து செல்ல கோபம் கொண்டு பேசியதும் பெரிய அளவில் கவனம் பெற்றது. அவர்தான் தற்போது ரயில் விபத்தில் பலியாகி உள்ளார்.

சடலம் மீட்பு: விபத்தை தொடர்ந்து தாம்பரம் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தங்கள் பைக்கை ரயில்வே பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, தண்டவாளத்தின் வழியாக குறுகிய பாதையில் சென்று பார்க்கிங்கை அடைய முடிவு செய்தனர். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். நடை பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இருந்தாலும், பலர் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

A person who got trending through Neeya Naana show met with an train accident in Chennai

இன்னொரு விபத்து: இதேபோல் பொன்னேரியில் கட்டுமானத் தொழிலாளர்கள் சந்திரசேகர் (50), சுப்ரமணி (47) ஆகியோர் புதன்கிழமை ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்று நடைமேடைக்கு செல்ல முயன்றபோது டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலைய அவர்கள் மீது மோதியது. சேலத்தை சேர்ந்த சந்திரசேகர், மணி ஆகிய இருவரும் பொன்னேரியில் கூலி வேலை செய்து வந்தனர்.

நடை பாலங்கள் இருந்தபோதிலும், பயணிகள் இன்னும் ரயில்வே தண்டவாளங்களைக் ஆபத்தான முறையிலேயே கடக்கிறார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை சென்ட்ரல் செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் அங்கிருந்து சேலம் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக வந்துள்ளனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் சடலங்களை மீட்டனர்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை-கூடூர் பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கத் தொடங்கிய பிறகு, அத்துமீறல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி நடை பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இருந்தாலும், பலர் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+