வீடு கட்டியாச்சு..திருஷ்டி கழிக்கனுமே! பலி கொடுக்க தயாரான கோழி எஸ்கேப்! பிடிக்க போனவர் பலியான சோகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே புதிதாக கட்டிய வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுக்க வாங்கிய கோழி பறந்து சென்ற நிலையில், அதனை பிடிக்க வேண்டுமென சென்ற போது வயதான ஒருவர் பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு தொழிற்சாலை உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி முடித்த பின்னர் புதுமனை புகுவிழாவிற்கு முன்னதாக தங்கள் வசதிக்கேற்றார் போல் ஆடு கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுப்பது வழக்கம் அவ்வாறு வழி கொடுக்கும் போது வீட்டில் ஏற்பட்டிருந்த திருஷ்டிகழியும் என்பது நம்பிக்கை.

கிராமப்புறங்களில் இன்னும் கூட புதுமனை புகுவிழாவுக்கு முன்னதாக கோழிகளை பலி கொடுக்கும் வழக்கமானது தொடர்ந்து வருகிறது அறுக்கப்பட்ட கோழியை வீட்டை சுற்றி வந்து அந்த ரத்தத்தை சுவர்களில் ஒட்ட வைத்தால் நல்லது என கூறு வருகின்றனர். அறிவியலுக்கு அப்பாற்பட்டு இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றாலும் சில நேரங்களில் சில சிக்கல்களும் எழுவது வழக்கம்தான்

 சென்னையில் ஷாக்

சென்னையில் ஷாக்

அந்த வகையில் சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே புதிதாக கட்டிய வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுக்க வாங்கிய கோழி பறந்து சென்ற நிலையில், அதனை பிடிக்க வேண்டுமென சென்ற போது வயதான ஒருவர் பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறது.

 பலி கொடுக்க கோழி

பலி கொடுக்க கோழி

அதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்புகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடாகப், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றார்.

முதியவர் பலி

முதியவர் பலி

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த கோழி பறந்து சென்றது அதை பிடிக்க துரத்தியபோது கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பலி கொடுக்க வாங்கிய கோழி பறந்த சென்ற நிலையில், அதனை பிடிக்க வேண்டுமென சென்ற போது வாயதான ஒருவர் பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+