சிறகடிக்க ஆசை: முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இப்போதாவது புத்தி வந்ததே! மீனாவின் விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 19ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணியின் சூழ்ச்சிகள் எல்லாமே முத்து மீனாவிற்க்கு தெரிகிறது. சிந்தாமணியிடம் போய் அவர்கள் நியாயம் கேட்க போக கடைசியில் ஏமாந்து வருகின்றனர். அதே நேரத்தில் சிந்தாமணி பற்றிய விஷயங்களை எல்லாம் முத்து விஜயாவிடம் சொல்ல விஜயா கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவும் முத்துவும் சிந்தாமணியை பார்க்க வருகின்றனர். அப்போது ரோட்டில் சிந்தாமணி நின்று கொண்டிருக்க அவரிடம் போய் முத்துவும் மீனாவும் நீ எங்க அம்மாவை பிளான் பண்ணி ஏமாத்திட்டா... உன் சூழ்ச்சிகளை எல்லாம் நாங்க கண்டுபிடிச்சிட்டோம். எங்களுக்கு இப்போ எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு.. நீ தானே எங்க அம்மாவுக்கு பணம் கொடுத்து இருக்க, ஆனா அது அந்த பைனான்சியர் கொடுத்ததாக சொல்லி ஏமாத்தி இருக்க..

எதற்காக இப்படி பண்ணுன என்று கேட்க அதற்கு சிந்தாமணி உங்க அம்மா என்னுடைய மாஸ்டராக இருந்தார். அவங்க கிட்ட பணத்தை கொடுத்துட்டு வாங்க முடியாது அதனால தான் நான் இன்னொருவர் மூலமாக கொடுத்தேன் இது பைனான்ஸ் பண்ற எல்லாரும் செய்றது தான். இதுல பெருசா ஒன்னும் தப்பில்லையே என்று சிந்தாமணி திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

கோபத்தில் முத்து

அதற்கு முத்துவும் மீனாவும் கோபப்பட்டு சிந்தாமணியிடம் பேசுகின்றனர். அப்போது சிந்தாமணி நான் உன் வீட்டுக்கு வைத்த சீலை நீக்க வேண்டும் என்றால் நீ என்னை தோற்கடித்து உட்கார்ந்திருக்கும் பதவியை ரிசைன் பண்ணனும் என்று சொன்னதும் முத்து கோவப்படுகிறார். நீ இப்படி துரோகம் பண்ணுனது இந்த பதவிக்காகதானா என்று திட்டி விட்டு உன்கிட்ட இருந்து பத்திரத்தை எப்படி வாங்கணும்னு எங்களுக்கு தெரியும் நான் அப்படியே வாங்கிக்கிறேன் என்று அங்கிருந்து போகிறார்.

சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை.. அதிர்ச்சியில் விஜயா.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்
அப்போது கூட சிந்தாமணி மீனாவிடம் நீ எப்ப வேணாலும் பதவியை ரிசைன் பண்ணுனதும் உங்க வீட்டை உங்களுக்கே தந்து விடுகிறன் என்று சொல்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வருகின்றனர் அந்த நேரத்தில் விஜயாவிற்காக மீனாவின் அம்மா கட்டில் மெத்தை ஏர்கூலர் எல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் விஜயா அதை எல்லாம் போதாது என்பது போல திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிந்தாமணியின் சூழ்ச்சி

அந்த நேரத்தில் முத்து வந்து சிந்தாமணி செய்த சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் சொன்னதும் விஜயா அதிர்ச்சி அடைகிறார். சிந்தாமணி அப்படி பண்ணிருக்க வாய்ப்பே இல்லை என்று மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க, விஜயாவை அண்ணாமலை முத்து எல்லாரும் திட்டுகின்றனர். பிறகு விஜயா தான் செய்தது தவறு என்பது போல பீல் பண்ணி அமைதியாக இருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மீனா எடுத்த முடிவு

அதைத்தொடர்ந்து மாடியில் மீனா தனியாக நின்று சிந்தாமணி பேசியதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வந்து என்ன ஆச்சு என்று விசாரிக்க? நான் வேணும்னா பதவிவை ரிசைன் பண்ணவா என்று மீனா கேட்க, அதற்கு முத்து கோபப்பட்டு திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+