தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்வு.. 3 நாட்களுக்கு பிறகு நடந்த மாற்றம்
சென்னை: 22 காரட் தங்கம் விலை கடந்த மே 16, 17, 18ம் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லட்சத்து 18000 ஆக இருந்தது. ஆனால் மே 19ம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 120 ரூபாய் உயர்ந்து, ரூ.14 ஆயிரத்து 870க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த இரண்டு வருடம் முன்பு வெறும் 50 முதல் 60 ஆயிரம் வரை தான் இருந்தது. ஆனால் தற்போது தங்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் என்கிற அளவிற்கு போயிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கம் விலை சுமார் 116% க்கும் மேல் (அதாவது இரண்டு மடங்குக்கும் அதிகமாக) விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் தீவிரமான ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பங்குச்சந்தைகள் மற்றும் நாணய மதிப்பில் நிலையற்ற தன்மை நிலவும் போது, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பான முதலீடான ( தங்கத்தின் மீது திருப்புகிறார்கள். இதனால் உலகளவில் தங்கத்திற்கான தேவை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
அதேபோல் இந்தியா, சீனா போன்ற பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் பாதுகாப்பிற்காகச் சர்வதேச சந்தையிலிருந்து டன் கணக்கில் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி குவித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு இணையான தங்களின் கையிருப்பை வலுப்படுத்த வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளதால், அதன் சர்வதேச விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
அதேபோல் உலகளாவிய பணவீக்கம் காரணமாகப் பணத்தின் மதிப்பு கடுமையாக குறைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவுஏற்பட்டுள்ளது. எனவே பணவீக்கத்திற்கு எதிரான மிகச்சிறந்த அரணாகத் தங்கம் பார்க்கப்படுவதால், அதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கின்றன. மேலும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் தங்கத்தின் விலையை நேரடியாகப் பாதித்துள்ளது.
அதேபோல் இந்தியா தனது தேவைக்காக தங்கத்தைப் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவருகிறது. சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள இந்த சூழலில், இந்திய நிறுவனங்கள் கூடுதல் பணம் கொடுத்துத் தங்கத்தை வாங்க வேண்டியுள்ளது. இந்த கூடுதல் செலவு மற்றும் உள்நாட்டு வரிகள் அனைத்தும் ஆபரணத் தங்கத்தின் விலையாக நம் தலைமேல் விழுவதாலும் தங்கம் விலை உயர்ந்தபடி உள்ளது.
இதனால் தான் மே 19ம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 120 ரூபாய் உயர்ந்து, ரூ.14 ஆயிரத்து 870க்கு விற்பனையாகிறது.
-
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications