அதிமுக தலைமை அலுவலக சீல் வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

என்ன வழக்கு?
இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வன்முறை தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

போலீஸ் அறிக்கை
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் வன்முறை தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டது.

நீதிபதி கேள்வி
இதனைப் பார்த்த நீதிபதி சதீஷ் குமார், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் செல்லும் போது காவல்துறையினர் அமைதியாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதால் மட்டுமே பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

காவல்துறை விளக்கம்
தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட வீடியோக்களில் 10 சதவிகிதம் கூட வீடியோ ஆதாரங்களில் சமர்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினர். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஏன் சீல் வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு காவல்துறை தரப்பில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேற்கொண்டு இரு தரப்பில் எந்த மோதலில் இல்லை என்று உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனால் சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம். அதிமுக தலைமை அலுவலக வன்முறையால் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு இபிஎஸ்-க்கு இருப்பதால், அனைவரும் அவர் பக்கம் இருப்பதாக கருத முடியாது. அலுவலக விசாரணை தொடர்பான விசாரணையில் எனது பதவியை தீர்மானிக்க முடியாது. இதனால் இரு தரப்பும் இடையிலான சர்ச்சையை நீதிமன்றம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையின் அறிக்கைக்கு பதில் மனுவை திங்கட் கிழமை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications