பாஜகவிற்கு பெரிய ஷாக்காச்சே.. அண்ணாமலையை அம்போ என்று விடும் "வள்ளல்".. துள்ளி குதித்த எடப்பாடி!
சென்னை: திராவிட இயக்கங்களை சமீபத்தில் கடுமையாக சாடிய வள்ளல் ஒருவர் அதிமுக பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக மோதல் உச்சத்தில் உள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அண்ணாமலை எங்கள் தலைவர்களை தவறாக பேசுகிறார் என்று கூறி கூட்டணியை முறித்துக்கொண்டது. அதோடு நிற்காமல் 2024 லோக்சபா தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையில் தனியாக கூட்டணி அமைப்போம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலுக்கும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனியாகவே கூட்டணி அமைத்து தேர்தல் சந்திப்போம் என்று அதிமுக உறுதியாக அறிவித்துவிட்டது.

பாஜக நிலைப்பாடு: ஆனால் பாஜக இப்படி உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பாஜக இன்னமும் தனியாக கூட்டணி அமைப்போம். பாஜக தலைமையில் கூட்டணி அமைப்போம் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக 9 தொகுதியில் கவனம் செலுத்த போகிறோம். 9 தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்பதை மட்டும் பாஜக அறிவித்து உள்ளது. இதற்காக அங்கே தேர்தல் பணிகளை செய்யவும் பாஜக களமிறங்கி உள்ளது.
மற்றபடி அதிமுகவுடன் கூட்டணி பற்றி டெல்லி முடிவு எடுக்கும். டெல்லி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். அங்கே பேச்சுவார்த்தை போய்கொண்டு இருக்கிறது. 5 மாநில தேர்தலில் பாஜக பிசியாக இருக்கிறது. அந்த தேர்தல் முடிந்த பின்பே பாஜக தமிழ்நாடு பக்கம் கவனம் செலுத்தும். அதுவரை இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் வராது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
( லாஸ்ட் நொடியில்.. கிளம்பாத ஸ்டாலின்.. கனிமொழி வார்த்தையால் இறுக்கமான சோனியா முகம்.. என்னாச்சு?)
இந்த கூட்டணி முறிவில் சிலர் சமாதான முயற்சிகளை கூட செய்தனர். சில பிஸ்னஸ் மேன்கள், இவர்கள் கூட்டணியில் இருந்த தலைவர்கள், சில ஜாதி தலைவர்கள், சில கொங்கு மண்டல அதிகாரிகள் கூட இதில் சமாதானம் முயற்சிகளை செய்தனர். கடைசியில் அது தோல்வியிலேயே முடிந்தது.
தாவும் தலை: இப்படிப்பட்ட நிலையில்தான் திராவிட இயக்கங்களை சமீபத்தில் கடுமையாக சாடிய வள்ளல் ஒருவர் அதிமுக பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவை கடந்த சில மாதங்களாக அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக உடன் அவர் நெருக்கமாக இருந்தார். சில வழக்குகள் காரணமாக அவர் டெல்லி பாஜகவுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
( என் அரசியல் எதிர்காலமே போயிடும்! கொங்கில் கொதித்த விஐபி.. எடப்பாடிக்கு எதிராக திட்டம்? என்ன நடந்தது?)
இப்படிப்பட்ட நிலையில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிமுகவுடன் செல்ல முடிவு செய்துள்ளாராம். பாஜக - அதிமுகவின் ஒருங்கிணைந்த கூட்டணியில்தான் இருக்க அவர் நினைத்தார். இவர்கள் கூட்டணி முடிந்ததும்.. பாஜகவுடன் செல்ல முடிவு செய்தார். ஆனால் அண்ணாமலை சரியாக இவரை கவனிக்கவில்லை. இவருக்கு உரிய மரியாதையை தரவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் அப்செட் ஆனவர் பாஜக வேண்டாம். நான் அதிமுகவுடனேயே இருக்கிறேன் என்று இவர் அதிமுக பக்கம் சென்றுவிட்டாராம். அப்படி சென்றவர் சும்மாக இல்லாமல்.. பாஜகவை விடாதீங்க. நன்றாக கிண்டல் செய்யுங்கள். முக்கியமாக அண்ணாமலையை விட வேண்டாம். பாஜகவிற்கு நாம் பிரஷர் கொடுக்க வேண்டும் என்று கூறி.. தனது "படை பலத்தை" ஏவி விட்டுள்ளாராம். இன்றே கூட அந்த வள்ளலின் படைகள் அண்ணாமலைக்கு எதிராக சில விஷயங்களை சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டது கூட குறிப்பிடத்தக்கது. இதை அண்ணாமலை எப்படி சமாளிக்க போகிறார்.. பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைய போகிறது. கூட்டணி அமையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications