என் அரசியல் எதிர்காலமே போயிடும்! கொங்கில் கொதித்த விஐபி.. எடப்பாடிக்கு எதிராக திட்டம்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கில் தோல்வி அடைந்தால் அவரின் அரசியல் வாழ்க்கையே போய்விடும். அதனால் கண்டிப்பாக பாஜக அதிமுக - இணைய வேண்டும் என்று அதிமுகவில் ஒரு விஐபி எம்எல்ஏ வலியுறுத்த உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் இந்த நிலைப்பாடு பற்றி மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

A Kovai MLA is not happy with Edappadi Palanisamy for breaking BJP AIADMK alliance

பேட்டி: அதில், லோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார். கொங்கில் அதிமுக - பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதுதான் நடந்தது. அதனால் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமையும். இதனால்தான் அவர்கள் மீண்டும் சேருவார்கள் என்று நான் கூறுகிறேன். மோடி வேண்டாம் என்பது திமுக வாதம்.. மோடிதான் வேண்டும் என்பது பாஜக வாதம். அப்படி இருக்க அதிமுக எதை சொல்லி வாக்கு கேட்கும்.

( அந்த 9 தொகுதி.. மொத்தமாக காலியாகிடும்.. தமிழக வெற்றிக்கு சான்ஸே இல்லை.. பாஜகவை அலற விட்ட கணிப்பு )

அதிமுக எப்படி வெற்றிபெறும். ஆகையால் இது அதிமுகவிற்கு எதிராக மாறி திமுகவிற்கு செல்லும். பாஜக - அதிமுக வாக்குகள் கடுமையாக பிரியும். அதிமுகவை சிறுபான்மையினர் நம்ப மாட்டார்கள். அதனால் அவர்களுக்கும் வாக்குகள் செல்லாது. அவர்களுக்கும் வாக்குகள் கொங்கு மண்டலத்தில் பிரியும். இதனால் தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக சேர வேண்டிய கட்டாயம் உள்ளதுலோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார்.

A Kovai MLA is not happy with Edappadi Palanisamy for breaking BJP AIADMK alliance

கொங்கில் கொதிக்கும் விஐபி: கொங்கில் தோல்வி அடைந்தால் அவரின் அரசியல் வாழ்க்கையே போய்விடும். அதனால் கண்டிப்பாக பாஜக அதிமுக - இணைய வேண்டும் என்று அவர் முன்னிறுத்துவார். எடப்பாடியை "அவர்" இப்போது பிரஸ் செய்ய விரும்பவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் எடப்பாடிக்கு பிரஷர் கொடுப்பார். எடப்பாடி பழனிசாமி சேலத்தை மட்டும் பற்றி கவலைப்படுகிறார். மற்ற கொங்கு மண்டலத்தை பற்றி கவலைப்படவில்லை. இதை அந்த விஐபி எம்எல்ஏ எப்படி பார்த்துக்கொண்டு இருப்பார். அவர் எப்படி வேடிக்கை பார்ப்பார்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது போல ஆக கூடாது என்று அந்த விஐபி நினைக்கிறார். இதனால் அந்த விஐபி எம்எல்ஏ அவரின் டீம் எடப்பாடியை கேட்க காத்திருக்கின்றனர். இப்போது பிரச்சனை வேண்டாம். பின்னர் அவரிடம் கேட்கலாம். இப்போது காற்று நம்ம பக்கம் இல்லை. அதன்பின் காற்று திசை மாறும். அப்போது எடப்பாடியிடம் கேள்வி கேட்கலாம் என்ற திட்டத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறார். டிசம்பருக்கு பின் அவர்கள் கேட்கலாம். 5 மாநில தேர்தல் முடிந்த பின் அவர்கள் கேள்வி எழுப்பலாம்.

A Kovai MLA is not happy with Edappadi Palanisamy for breaking BJP AIADMK alliance

அதனால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். இன்னொரு பக்கம் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னையில், வேலூர் இதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகள் என்று நினைக்கிறார்கள். இங்கே முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். சில கணிசமான வாக்குகளை பெற்றுள்னனர். இந்த முறை அவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. தென்காசியில் போட்டியிட உள்ளனர். ஆனால் அதிமுக இல்லாமல் இவர்கள் இங்கே வெற்றிபெறுவது என்பது பெரிய சந்தேகம்தான, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+