அந்த 9 தொகுதி.. மொத்தமாக காலியாகிடும்.. தமிழக வெற்றிக்கு சான்ஸே இல்லை.. பாஜகவை அலற விட்ட கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் பாஜக லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . அண்ணாமலை இதை வெளிப்படையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

பாஜகவின் திட்டம்: பாஜகவின் இந்த திட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மேலே உள்ள தொகுதிகளில் பாஜக ஏற்கனவே சில இடங்களில் போட்டியிட்டுள்ளனர். கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னையில், வேலூர் இதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகள் என்று நினைக்கிறார்கள். இங்கே முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். சில கணிசமான வாக்குகளை பெற்றுள்னனர். இந்த முறை அவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை.
( எல்லாமே நாடகம்.. சந்தர்ப்பம்! பாஜகவை அலறவிட்ட எடப்பாடி.. தூக்கி எறிஞ்சிட்டாராமே.. மொத்தமா கேம் ஓவர்)
அதற்கு பதிலாக இந்த முறை தென்காசியில் கூட அவர்கள் நிற்க வாய்ப்பு உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை கவர வேண்டும் என்று அவர்கள் தென்காசியில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அங்கே வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி இங்கே எல்லாம் அவர்கள் தோல்வி அடைந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிவு உள்ள இடங்களில் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது.

அதை மனதில் வைத்தே இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது. சர்வே எடுத்துதான் அவர்கள் இதை தேர்வு செய்துள்ளனர். இங்கே அதிமுகவினரும் அதிமுக வலிமையாக உள்ளனர். இங்கே எல்லாம் அதிமுக - பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறும். அதனால் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமையும். இதனால்தான் அவர்கள் மீண்டும் சேருவார்கள் என்று நான் கூறுகிறேன். மோடி வேண்டாம் என்பது திமுக வாதம்.. மோடிதான் வேண்டும் என்பது பாஜக வாதம். அப்படி இருக்க அதிமுக எதை சொல்லி வாக்கு கேட்கும்.
அதிமுக எப்படி வெற்றிபெறும். ஆகையால் இது அதிமுகவிற்கு எதிராக மாறி திமுகவிற்கு செல்லும். பாஜக - அதிமுக வாக்குகள் கடுமையாக பிரியும். இதனால் 9 தொகுதிகளில் பாஜகவிற்கு எதிராக செல்லும். அதிமுகவை சிறுபான்மையினர் நம்ப மாட்டார்கள். அதனால் அவர்களுக்கும் வாக்குகள் செல்லாது. அவர்களுக்கும் வாக்குகள் கொங்கு மண்டலத்தில் பிரியும். இதனால் தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக சேர வேண்டிய கட்டாயம் உள்ளது., என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications