Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான், அண்ணாமலை, எடப்பாடி.. ஏன் வீரப்பன் மகளை கூட விட்டுவைக்காத "சத்தியம்".. விடாமல் துரத்துதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் சில வாக்கியங்கள், வார்த்தைகள் கவனம் பெறும். மக்களால் நான் மக்களுக்காக நான், மாற்றம் முன்னேற்றம் அன்புமணி, விடியல் ஆட்சி, மோடியா லேடியா, மோடியா டாடியா என்று பல விஷயங்கள் டிரெண்டாகும். அப்படிதான் இந்த தேர்தலில் சத்தியம் டிரெண்டாகி வருகிறது.

இந்த லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட எல்லா பிரச்சார மேடைகளில் "சத்தியம்" கவனம் பெற்று வருகிறது. மேடைக்கு மேடை ஏறி மூத்த தலைவர்கள் பலரும் சத்தியம் செய்து வருகின்றனர்.. அல்லது சத்தியம் கேட்டு வருகின்றனர். வீரப்பன் மகள் தொடங்கி சீமான் வரை பலரையும் அப்படி விடாமல் இந்த சத்தியம் துரத்துகிறது.. அப்படி என்ன சத்தியம்.. யார் யாருக்கு கொடுக்கிறார்கள்.. வாருங்கள் பார்க்கலாம்.

A promise is following major politicians in Tamil Nadu during this Lok Sabha elections 2024

துரை வைகோ சத்தியம்: திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.

இதில் பேசிய துரை வைகோ மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் ; செத்தாலும் தனி சின்னம் தான். இது சத்தியம். உதய சூரியன் சின்னத்தில் எங்களுக்கு மரியாதை இருக்கிறது என்று ஆவேசமாகப் சத்தியம் செய்து.. மேடையை எல்லாம் தட்டி ஹீரோ கணக்காக பேசினார்.

வீரப்பன் மகள் சத்தியம்: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். அங்கே பிரச்சாரத்தில் பேசிய இவர், சும்மா விடுவேன்னு நினைச்சீங்களாடா.. நான் விட மாட்டேன். காலம் எனக்கு கைகொடுக்கும். என் அப்பா என்னுடன் இருக்கிறேன். மக்களுக்காக நான் வாழ்வேன். மக்களுக்காக சாவேன்.. இது சத்தியம். இது அப்பா வீரப்பன் மேல் ஆணை.. சித்தப்பா சீமான் மீது ஆணை, பெரியப்பா பிரபாகரன் மீது ஆணை என்று சத்தியம் செய்தார்.

சீமான் சத்தியம்: தேர்தல் சின்னம் பறிக்கப்பட்டது தொடர்பாக ராமர் கோவிலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தம்முடன் சேர்ந்து சத்தியம் செய்ய தயாராக இருக்கிறாரா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சத்தியம் பற்றி பேசி உள்ளார். .

கரும்பு விவசாயி சின்னம் விவகாரத்தில் அண்ணாமலையை வரச் சொல்லுங்க.. அண்ணாமலை ஜெய் ஸ்ரீராம் என சொல்லுகிற ராம பக்தன்தானே.. நாம இரண்டு பேரும் ராமர் கோவிலுக்குப் போவோம்.. நீதான் என் சின்னத்தை பறிச்ச ஆளுன்னு நான் சத்தியம் செய்றேன். அதே ராமர் மேல எனக்கும் கரும்பு விவசாயி சின்னத்தை பறிச்சத்துக்கும் தொடர்பே இல்லைன்னு சத்தியம் செய்.. நான் கட்சியையே கலைச்சுருவேன்.. வா..ரெண்டு போரும் அயோத்திக்கு போவோமா? ராமரைத்தான் நீ பிக் கடவுள்னு நம்பிகிட்டு இருக்க.. வா போவோம்.. இந்த சேட்டை எல்லாம் வெச்சுக்கக் கூடாது.. 5 வயசில் இருந்து அரசியல் பண்றவன் நான்.. சிவகங்கை கலெக்டர் ஆபிசுக்கு 5 வயசில் கம்யூனிஸ்டு கொடி பிடிச்சுகிட்டுப் போனவன் நான்.. என் கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது. இவ்வாறு சீமான் சத்தியம் கேட்டார்.

அன்புமணி சத்தியம்: இரண்டு நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் பேசிய அன்புமணி, மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்; அந்த ஏக்கத்தை தணிக்கத்தான் பாமக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம். மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டை வளர விடாமல் தடுத்து உள்ளனர். மக்கள் இதனால் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கின்றனர். 2026ல் பாஜக - பாமக கூட்டணி ஆட்சி அமையும் இது சத்தியம் என்று அவரும் சத்தியம் செய்யும் கோதாவில் இறங்கினார்.

ராமதாஸ் சத்தியம்: மகன் சத்தியம் செய்தால் போதாது.. நானும் செய்கிறேன் என்று அப்பா ராமதாசும், களமிறங்கி உள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் பேசுகையில், "இன்று உலகில் பல வல்லரசுகளில் பல நல்ல தலைவர்கள் உள்ளனர். அந்த பெரிய பெரிய நாட்டின் தலைவர்கள் எல்லாம் கூட ஒரு மனிதரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவர் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.. அவர் ஒரு அற்புதமான தலைவர். உலக தலைவர்களே கண்டு வியக்கும் மனிதன் மோடி.

நான் நினைத்து இருந்தால் குடியரசுத் தலைவராகியிருக்கலாம், மந்திரியாக ஆகி இருக்கலாம்.. ஆனால் நான் தேர்தல் அரசியலில் நிற்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். ஏற்கனவே சத்தியம் செய்துள்ளதால் இப்படிப்பட்ட பதவிகளுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்.

இப்படி இவர்கள் எல்லாம் வைத்த சத்தியத்தை கேட்டுக்கொண்டு எடப்பாடி மட்டும் சும்மா இருப்பாரா.. அவரும்.. சதுரங்க வேட்டை படத்தில், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சொல்வது போல திமுக 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத 520 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் அவற்றில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை எதையும் செய்யாமல் இப்போது சத்தியம் தவறாத உத்தமர் போல திமுகவினர் நடிக்கின்றனர் என்று எடப்பாடியும் சத்தியம் "ரெபரென்ஸை" வைத்து பேசியது கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+