டேக் ஆப் செய்யும் "அந்த" நொடி.. திடீரென சுதாரித்த விமானிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் கத்தாருக்கு பல்வேறு விமானங்கள் செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் டோஹா நோக்கி அந்த விமானம் சென்றது
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் பஸ் வகை விமானம் ஆகும் இது.

டேக் ஆப்
விமானம் 8 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. அதன்படியே டேக் ஆப் செய்ய கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டது. விமானத்தில் மொத்தம் 139 பயணிகள் இருந்தனர். விமானிகள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர். மொத்தமாக விமானத்தில் 146 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விமானம்
இந்த நிலையில் விமானம் டேக் ஆப் செய்யும் நொடியில் அதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டேக் ஆப் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதை கடைசி நொடியில் விமானிகள் கவனித்து உள்ளனர். விமானத்தை டேக் ஆப் செய்ய விமானிகள் முயன்று உள்ளனர்.

இயந்திர கோளாறு
விமானத்தின் எஞ்சின்களில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன கோளாறு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விமானத்தை தொடர்ந்து டேக் ஆப் செய்து இருந்தால் அது பெரிய பிரச்சனையாக முடிந்து இருக்கும். விமானம் பெரிய விபத்தில் கூட சிக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுப்பாட்டு அறை
உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் விமானத்தை டேக் ஆப் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். விமானத்தில் இயந்திர கோளாறு இருக்கிறது. அதனால் டேக் ஆப் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். விமானி உரிய நேரத்தில் வேகமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு, 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் உயிர் தப்பினர். இந்த கோளாறுக்கான் காரணம் தெரியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் இது பற்றி விசாரணை செய்து வருகின்றன. பயணம் தடைபட்ட பயணிகளுக்கு வேறு விமானம் 24 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications