ஏ.ஆர். ரஹ்மான் வீசிய புயல்! மகாத்மா காந்தியை கையிலெடுத்து! கண்களில் பாய்ந்த அம்பு.. பரபர போஸ்ட்
சென்னை: ஐநா சபையில் ஜெனீவாவில் காந்தியடிகளின் வன்முறைக்கு எதிரான பொன்மொழியை அடையாள குறியீடாக வைத்தால் என்ன என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் தமிழகத்தில் கோவை, சென்னை என அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

சென்னையில் அவர் இசை நிகழ்ச்சி நடத்திய போது இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்திற்கு வெளியே தான் நிற்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் எதற்காக ஐநா அவைக்கு சென்றார் என தகவலை அவரது சமூகவலைதளங்களில் பகிரவில்லை. இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி ஐநாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐநாவில் இசை நிகழ்ச்சி நடத்திய 2ஆவது இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐநாவுக்கு சென்றது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இன்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் நான் ஜெனீவாவில் உள்ள ஐநா தலைமையகத்தை பார்வையிட்டேன். என்னுடைய நண்பர்கள் என்னை அங்கு அழைத்து சென்றார்கள்.
அந்த தலைமையகத்தில் அனைத்து பிரிவுகளையும் நான் பார்த்தேன். அங்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அடையாளங்கள் ஓவியமாக வைக்கப்பட்டிருந்தன. அப்போது எனக்கு ஒன்று தோன்றியது- இந்தியாவின் அமைதியின் அடையாளமாக திகழ்ந்த மகாத்மா காந்தியின் பொன்மொழியை ஓவிய அடையாளமாக வைத்தால் என்ன?

அதாவது "An eye for an eye makes the whole world blind" இது காந்தியின் பொன்மொழி. பழிக்கு பழி என வன்முறையை கையில் எடுத்தால் ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடும் அல்லது உலகமே சுடுகாடாகிவிடும். இது போன்றதொரு அடையாளத்தை வைத்தால் அங்கு வரும் பல்வேறு தரப்பினருக்கு அகிம்சை என்பது தொடர்ந்து நினைவில் இருக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அவருடைய போஸ்ட்டில் காந்தியின் பொன்மொழியின் அடையாளமாக காந்தியடிகள் கையில் குழந்தையுடனும் அதன் இரு கண்களில் அம்புகள் குத்தப்பட்டது போன்று காணப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்டது போன்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications