A.R.Rahman: "நீயே ஒளி" "தமிழ் வளம் வாழ்க" தமிழுக்காக நினைவுச் சின்னம்! ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் வடிவில் உள்ள இது விரைவில் கட்டடமாக உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

a r rahman

இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்" உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.

தமிழின் நீட்சி

இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

நினைவுச் சின்னம்

இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.

ஒரு கட்டடம்

ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இந்நினைவுச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்.

இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.

தமிழால் மகிழ்வோம்

இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் ஒரு நினைவுச்சின்னத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது.

நீயே ஒளி

அதன் நுழைவு வாயிலில் நீயே ஒளி என எழுதப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் தமிழ் வாசகங்கள் மற்றும் எழுத்து வடிவங்கள் உள்ளன. அது போல் பக்கவாட்டில் தமிழ் வளம் வாழ்க எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. ஆரோவில் போல் வட்ட வடிவில் இருக்கும் இந்த மாதிரி சின்னத்தின் உள்ளே விளக்கு ஒளி பிரதிபலிக்கிறது.

தமிழ் மீது தீராத காதல்

தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர் ஏ.ஆர்.ரகுமான். ஒரு முறை ஒரு விழாவில் தனது மனைவி சாயிராவுடன் மேடையை பகிர்ந்த போது கூட அவர் ஆங்கிலத்தில் பேசிய போது ரகுமான், "தமிழில் பேசுங்கள்" என்றார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே தமிழில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். விரைவில் பேசுகிறேன் என கூறி அதற்காக சாரி என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ்தான் இணைப்பு மொழி

அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில் இந்தியைத் தான் இணைப்பு மொழியாக கருத வேண்டும் என கூறியிருந்தார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுமான் ,"என்னை சந்தித்த சீன நபர் ஒருவர், நீங்கள் இந்தியரா, எனக்கு வட இந்தியர்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் அழகாக இருப்பார்கள் என்றார்.

அமித்ஷாவுக்கு பதிலடி

அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருக்கிறாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னை மிகவும் பாதித்தது. மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தையும் கவுரவத்தையும் நிலைநாட்ட விரும்புகிறார்கள் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த ரகுமானிடம் " இந்திதான் இணைப்பு மொழி" என அமித்ஷா சொன்னது குறித்து கேட்கப்பட்டது.

தமிழணங்கு

அதற்கு அவர் தமிழ்தான் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கருப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+